உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று தான் கிரிக்கெட். இந்த விளையாட்டு இவ்வளவு பிரபலமான இருப்பதற்க்கு முக்கிய காரணம் இந்த விளையாட்டில் கலந்துக்கொள்ளும் வீரர்கள் தான். பல வருடங்களாக பல புதிய புதிய வீரர்கள் தங்களது சிறப்பான விளையாட்டை கொடுத்தாலும் முன்னாள் வீரர்கள் பல மக்கள் மனதில் இன்றளவும் இருந்து வருகின்றனர். அதுப்போன்ற முக்கிய வீரர்களில் ஒருவர் தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டெரெக் அண்டர்வுட்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முன்னாள் இங்கிலாந்து அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தான் இந்த டெரெக் அண்டர்வுட் (Derek Underwood). இவர் அன்றைய காலகட்டத்தில் சிறந்து விளங்கிய சுனில் கவாஸ்கரின் விக்கெட்டை வீழ்த்தி புகழ்பெற்றவர். இந்நிலையில் தான் தற்போது இவர் உயிரிழந்தார் என்னும் தகவல் (Derek Underwood Death News) வெளியாகியுள்ளது. இப்போது அவருக்கு வயது 78.
இவர் ஒரு இடது கை ஆர்த்தடாக்ஸ் ஸ்பின் பவுளர் ஆவார். மேலும் இவரது சிறந்த பைலிங்கின் காரணமாக அந்த காலகட்டத்தில் இவர் மிகவும் புகழ்பெற்ற பவுலர்களில் ஒருவராக இருந்துள்ளார். இவர் 60 மற்றும் 70 காலகட்டங்களில் தலைசிறந்த பவுலர் ஆவார். அதற்கு ஏற்றாற்போல தான் அவர் அதிக அளவிலான விக்கெட்களையும் குவித்து இருந்தார்.
86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 297 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் இவர் ஒரு சுழற்பந்து வீச்சாளராக 24 ஆண்டுகள் நீடித்துள்ளார். இவருடைய மொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 2,465 விக்கெட்டுகள் ஆகும். இவை ஒரு பகுதி மட்டும் தான்.
கடந்த 1977-ம் ஆண்டில் அவர் மொத்தம் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 3-1 என கணக்கில் வீழ்த்தியது. இந்த போட்டியில் இவரது பங்களிப்பு முக்கிய இடத்தை பிடித்தது.
1933-ம் ஆண்டு முதல் 1934-ம் ஆண்டு வரை நடைபெற்ற சுற்றுப்பயணத்தின் போது இங்கிலாந்து அணி பெற்ற வெற்றிக்குப் பிறகு பெற்ற முதல் தொடர் வெற்றி இதுவாகும். மற்றொரு தந்திரமான இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஹெட்லி வெரிட்டி, மூன்று டெஸ்ட் போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kent Cricket is in mourning following the death of one of the icons of the Club, Derek Underwood, at the age of 78. pic.twitter.com/zBHwfczbL8
— Kent Cricket (@KentCricket) April 15, 2024
இதையும் படியுங்கள்: IPL 2024: வரலாற்று சாதனை படைத்த தோனி..! தல எப்பவுமே மாஸ் தான்..! |