மக்கள் மத்தியில் வெள்ளித்திரை நடிகர்கள் எவ்வளவு பிரபலமோ அதே அளவுக்கு சின்னத்திரையில் உள்ள பிரபலங்களும் மிகவும் பிரபலம். அதுபோல் தான் பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சின்னத்திரை நடிகை தான் சாய் காயத்ரி. இவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்சியில் பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் நடிக்கும் கதாபாத்திரங்களும் மக்களுக்கு பிடித்த வண்ணம் இருப்பதால் இவருக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது கூட ஒரு சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது இவர் ஒரு புதிய தொழில் (Serial Actress Saai Gayatri New Business) ஒன்றை தொடங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து அவர் தன் வளைதளப்பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருக்கும் சாய் காயத்ரி பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே என்னும் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ், சிவா மனசுல சக்தி ஆகிய தொடர்களில் நடித்தார்.
ஆனால் தற்போது அவர் அதிக அளவில் சீரியல்களில் தலைக்காட்டவில்லை. இந்நிலையில் தான் தற்போது இவர் சாய் சீக்ரெட்ஸ் (Sai Secrets) என்னும் பெயரில் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் ஒரு கம்பெனியை தொடங்கியுள்ளார். அந்த கம்பெனியின் கீழ் அவர் ஹேர் ஆயில்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
இவர் தயாரிக்கும் ஹேர் ஆயில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த ஆயிலின் விற்பனையும் அதிகமாக உள்ளது. இதை நடிகை சாய் காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நிறுவனத்தில் ஹேர் ஆயில் தயாரிப்பு முதல் பேக்கிங் மற்றும் டெலிவரி என ஒரு பெரிய குழுவே வேலை செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த முயற்சிக்கு மக்கள் மற்றும் சக சின்னத்திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: பிரபல வெள்ளித்திரை நடிகையுடன் இணையும் ஈரமான ரோஜாவே சீரியல் திரவியம்..! |