மலேசியாவில் கோலாலம்பூர் நகரில் செவ்வாய்க்கிழமை அன்று 13-வது ஜீனியர் ஆடவர் ஹாக்கி போட்டி (FIH Hockey Men’s Junior World Cup 2023) நடைபெற்றது. இந்த முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா, தென்கொரியா அணிகள் India vs South Korea மோதின. முதல் நாளில் 6 ஆட்டங்கள் நடைபெற்றன.
இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி 11-வது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்பை சரியாக பயன்படுத்திய அராய்ஜீத் கோலடித்தார்.
சுறுசுறுப்பாக விளையாடிய அராய்ஜீத் மீண்டும் 16-வது நிமிஷத்தில் கோலடித்தார். இதனால் இந்திய அணியின் கோல் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. எதிர்முனையில் விளையாடிய தென்கொரியா அணி கோலடிக்கும் முயற்சிகள் அனைத்தையும் இந்திய அணி சாமர்த்தியமாக தடுத்துவந்தது. அடுத்த 30-வது நிமிஷத்தில் அமன்தீப் சிங் கோலடிக்க இந்திய அணியின் கோல் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலையுடன் நிறைவு செய்தது.
அதன் பின்னர் தொடங்கிய 2-வது பாதியில் தென்கொரியா அணி கோல் கணக்கை தொடங்க முனைப்பு காட்டி வந்தது. 38-வது நிமிஷத்தில் தென்கொரியாவிற்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் டோஹியுன் லிம் சரியாக பயன்படுத்தி கோலடித்தார். ஆட்டத்தின் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி 41-வது நிமிடத்தில் அராய்ஜீத் ஃபீல்டு கோல் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கை அதிகரித்தது.
இந்திய அணியின் கோல் கணக்கை சமன் செய்யும் நோக்கத்தில் விளையாடிய தென்கொரிய அணி 45-வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பை மிங்க்வோன் கிம் கோல் அடிக்க 2-3 என்ற கணக்கை நெருக்கியது தென்கொரியா. இறுதியில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் தென்கொரியா அணியை வென்றது. அடுத்த ஆட்டத்தில் இந்தியா, ஸ்பெயினை வரும் வியாழக்கிழமை எதிர்கொள்கிறது.