இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் புகழ்பெற்ற உணவுப்பொருட்களில் ஒன்றுதான் பில்டர் காபி. தமிழகத்தில் பலரது காலைப்பொழுது இந்த காபியுடன் தான் தொடங்குகிறது. இந்த காபியை பலரும் விரும்பி பருகுகின்றனர். இந்நிலையில் தான் தற்போது தமிழகத்தில் புகழ்பெற்ற இந்த காபிக்கு தற்போது உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உலகின் சிறந்த 38 காபிகள் பட்டியலில் தமிழகத்தின் பில்டர் காபி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. உலகின் பிரபலமான உணவு மற்றும் பயண வழிகாட்டி தளமான இருக்கும் டேஸ்ட் அட்லஸ் சமீபத்தில் ஒரு உலகளாவிய மதிப்பீட்டை வெளியிட்டது. இதன் படி உலகின் சிறந்த காபிகளின் பட்டியல் (World Best Coffee) வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இந்தியாவின் அதிலும் தமிழகத்தில் பிரபலமாக உள்ள பில்டர் காபி (Indian Coffee) இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் கியூபன் எஸ்பிரெசோ என்னும் காபி முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் பில்டர் காபி (Indian Filter Coffee) இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த காபியானது கியூபாவில் தோன்றிய ஒரு வகை எஸ்பிரெசோ ஆகும். இந்த காபி கருமை நிறம் கொண்ட வறுத்த காபி மற்றும் சர்க்கரையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. மேலும் இந்த காபியில் பாரம்பரியமாக இயற்கை பழுப்பு சர்க்கரை சேர்க்கப்பட்டுகிறது. இந்த காபி காய்ச்சும் போது சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இந்த வகையான காபிகள் பெரும்பாலும் இயந்திரங்களால் காய்ச்சப்படுகிறது.
நம் இந்தியாவின் பாரம்பரிய காபியான பில்டர் காபி இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும் இந்த காபி ஒரு எளிய காபி வடிகட்டி இயந்திரம் மூலம் காய்ச்சப்படுகிறது. இதனை தயாரிக்கும் முறையும் மிகவும் சுலபம் தான். நம் தென்னிந்தியாவில், ஃபில்டர் காபி என்பது ஒரு பானமாக மட்டும் இல்லை. இது ஒரு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பகுதியாகவும் உள்ளது.
இதையும் படியுங்கள்: கணவரை பிரிகிறாரா நயன்தாரா..! இன்ஸ்டாகிராமில் புதிய பதிவு..! |