Homeசெய்திகள்உலகின் மகிழ்ச்சியான நாடு: முதலிடத்தில் உள்ள நாடு எது? இந்தியாவுக்கு எந்த இடம்..!

உலகின் மகிழ்ச்சியான நாடு: முதலிடத்தில் உள்ள நாடு எது? இந்தியாவுக்கு எந்த இடம்..!

உலக அளவில் எந்த நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆண்டு தோறும் ஒரு கணக்கெடுப்பை நடத்தி அதன் முடிவுகளை வெளியிடும். இதேபோல தான் தற்போது ஒரு உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டள்ளது. இந்த பட்டியலில் (World Happiest Country List) எப்போதும் ஐரோப்பிய நாடுகள் தான் முன்னிலையில் இருக்கும்.

இந்த கணக்கெடுப்பு உலகில் உள்ள மக்களின் மகிழ்ச்சி மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் ஆபத்து காலங்களில் அரசு அவர்களை வழிநடத்தும் முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் தான் இந்த வருடத்திற்காக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை (Happiest Country in The World) ஐநா அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. அதன் பிறகு இரண்டாவது இடத்தை டென்மார்க் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து மூன்றாவது இடத்தை ஐஸ்லாந்து பிடித்துள்ளது. மேலும் நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை ஸ்வீடன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் பிடித்துள்ளது.

முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகள் (World Happiest Country List)

1பின்லாந்து
2டென்மார்க்
3ஐஸ்லாந்து
4ஸ்வீடன்
5இஸ்ரேல்
6நெதர்லாந்து
7நார்வே
8லக்சம்பர்க்
9சுவிட்சர்லாந்து
10ஆஸ்திரேலியா
 World Happiest Country

இந்த பட்டியலில் பெரிய நாடுகள் பிடித்துள்ள இடங்களையும் இனி பார்க்கலாம்.

இந்தியா126
ஆஸ்திரேலியா 10
இங்கிலாந்து20
அமெரிக்கா 23
ஐெர்மனி24
சீனா 64
ரஷ்யா70
பாகிஸ்தான்108

இந்த பட்டியலில் தொடர்ந்து ஏழாவது முறையாக பின்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: தமிழகத்தின் மினி ஊட்டி எங்கு உள்ளது தெரியுமா? இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடம்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular