உலக அளவில் பிரபலமாக உள்ள செயலிகளில் முக்கிய இடத்தில் உள்ள செயலி தான் You Tube. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு பொழுபோக்கிற்கான அம்சமாகவும் இது உள்ளது. மேலும் இப்போது பலரும் இந்த யூடியூபில் வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். இந்த நிலையில் தான் முதன் முறையாக யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட வீடியோ (Youtube First Video) குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரையில் நம் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஒரு செயலியாக தான் யூடியூப் உள்ளது. அந்த அளவிற்கு யூடியூப்பில் வீடியோக்கள் கொட்டிக் கிடக்கிறது என்று தான் கூறவேண்டும். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கென்று தனித்தனியாக யூடியூப் கணக்குகளை தொடங்கி அதில் பல விதமான வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர்.
இதன் மூலமாக அவர்கள் சம்பாதிக்கவும் முடிகிறது. இந்த நிலையில் தான் தற்போது யூடியூபில் முதன்முறையாக பதிவேற்றப்பட்ட வீடியோ குறித்த தகவல் (First Video in Youtube) வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ 19 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் அளவு 18 விநாடிகள் ஆகும். இந்த வீடியோ யூடியூப் நிறுவனரான ஜாவேத் கரிமின் வீடியோ (Youtube Founder Video) ஆகும். இந்த வீடியோவில் ஜாவேத் கரிம் ஒரு உயிரியல் பூங்காவில் யானைகள் கூட்டத்தின் முன் நின்று கொண்டு, நான் உயிரியல் பூங்காவில் இருக்கிறேன் என கூறுகிறார்.
இந்த வீடியோ பிரபலமும் அடைந்திருக்கிறது. அதன் பிறகு தான் யூடியூப் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. அதன் பிறகு சுமார் 18 மாதங்கள் கழித்து தான் கூகுள் யூடியூப்-பை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: புதிய சாதனை படைத்த இஷா அம்பானி..! மகிழ்ச்சியில் முகேஷ் அம்பானி..! |