தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. நேற்று தமிழ்புத்தாண்டு முன்னிட்டு மீன்களின் விலைகள் சற்று குறைவாகவே விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 15,000 விசைப்படகுகள் 2 மாதங்களுக்கு அதாவது 61 நாட்களுக்கு கடலுக்கு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை ஆகிய கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜீன் ஆகிய மாதங்களில் மீன்களின் இனப்பெருக்க காலமாக மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த காலகட்டங்களில் மீன்பிடிக்க சென்றால் மீன் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்பதால் இந்த காலக்கட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
இதனால் இந்த காலக்கட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த 61 நாட்கள் மீனவர்கள் தங்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சீரமைப்பார்கள். தமிழகத்தில் இந்த மீன்பிடி தடைக்காலம் நேற்று (ஏப்ரல்14) அன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இந்த மீன்பிடித் தடைக்காலம் வருகின்ற (Meen Pidi Thadai Kalam Date 2024) ஜூன் 14-ம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல் மீன்படி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் இந்த தடை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக மீன்வளத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீன்பிடி தடைக் காலக்கட்டத்தில் (Meen Pidi Thadai Kalam 2024) கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களின் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணமாக (meen pidi thadai kalam nivarana nithi 2024) வழங்கப்பட்டு வந்த ரூ.5000/- இனி ரூ.8000/- ஆக வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை தமிழகத்தில் 1.90 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்காலம் முடிந்த பிறகு மீன்களின் விலை உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: தென்மாவட்ட மக்களுக்கு உதவி செய்த மீனவர்கள், கிராம மக்களுக்கு நன்றி..! முதல்வர் ஸ்டாலின்..! |