சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் மிக்ஜாம் புயல் (Cyclone Michaung) உருவானது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் புயல், மழை, வெள்ளம் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டது.
இந்த கனமழையால் சென்னை நகரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சென்னை நகரமே மழை நீரால் சூழ்ந்தது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி நின்றது. சாலைகளிலும், வீடுகளிலும் வெள்ளம் புகுந்து மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட மிகவும் சிரமப்பட்டார்கள். இந்நிலையில் அவர்களின் பல உடமைகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டது.
இந்த வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க அரசும் தொடர்ந்து பல் மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் நிவாரணப் பொருட்களையும் வழங்கி வந்தது. இந்நிலையில் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு வெள்ள நிவாரண நிதியாக 6000 Nivaranam வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த நிவாரண நிதியை மக்கள் தங்களின் ரேஷன் கார்டை வைத்து ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அறிவிப்பு வெளியானது முதல் ரேஷன் அட்டை இல்லாதவர்கள் எவ்வாறு நிவாரண தொகை (vella Nivaranam) பெறுவது என்று பலருக்கும் பல கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் தான் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏதுவாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. மேலும் இதன் மூலம் பல மக்கள் விண்ணப்பித்தனர். இந்நிலையில் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் விரைவில் குடும்ப அட்டை இல்லாதவர்களின் வங்கி கணக்கில் நிவாரண தொகை (Vella Nivarana Thogai)வரவு வைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: சமூக வலைதள கணக்குகள் முடக்கம்..! அரசின் புதிய நடவடிக்கை..! |