கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து மக்கள் தங்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்காக குளிர்ச்சியானவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இந்த வெயிலுக்கு உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதற்காகவும், மக்கள் என்னவெல்லாமோ செய்கிறார்கள். அந்த வகையில் இந்த வெயிலுக்கு மக்கள் அதிகம் வாங்கி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் தர்பூசணி.
இந்த தர்பூசணி பழத்தை வாங்கி ஜீஸ் போட்டு அல்லது அதனை வெட்டி சாப்பிடுவார்கள். பழங்களிலேயே அதிகமான தண்ணீர் சத்து உள்ள பழமாக இருப்பது இந்த தர்பூசணி தான். இந்த பழத்தை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இந்நிலையில் தர்பூசணியில் கலப்படம் உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
அதவாது பழம் அதீத சிவப்பாக இருந்தால் அந்த பழத்தில் கலப்படம் உள்ளதாக (watermelon kalappadam in tamil) உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகின்றன. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பேசும் போது தர்பூசணி பழத்தை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், தர்பூசணி பழத்தை துண்டு (Adulterated watermelon) போட்டு விற்கும் போது அதனை கலர்பொடி கலந்த சர்க்கரை பாகுவில் கலந்து பூசுவதை கண்டுப்பிடிக்க முடிந்தது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இது போன்ற செயல்களை விற்பனையாளர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இயற்கையான சுவையை மாற்றி அமைக்கும் வகையில் தேவையற்ற சர்க்கரையை சேர்ப்பதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் இயற்கையான தர்பூசணி பழம் இளம் சிவப்பாக தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.