தமிழகத்தில் தற்போது வெயில் வாட்டி வரும் நிலையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு மக்கள் என்னவெல்லாம் செய்ய முடியுமே அதை எல்லாம் செய்துவருகிறன்றனர். அந்தவகையில் கோடை காலம் வந்துவிட்டாலே நம் நினைவுக்கு வருவது மாம்பழம் தான். ஏனென்றால் கோடை வந்துவிட்டாலே மாம்பழ சீசன் வந்துவிடுவதும் நாம் அறிந்த ஒன்று தான்.
ஆனால் மாம்பழம் மற்ற பழங்களை விட குளிர்ச்சியான பழம் கிடையாது. ஆனால் சாப்பிடுவதற்கு இனிப்பாகவும், சுவையாகவும் இருக்கும். பொதுவாக மாங்காய் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. மாங்காய் சற்று புளிப்பு சுவையில் இருக்கும். சில மாங்காய் இனிப்பான சுவையில் இருக்கும். அதில் மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து உண்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
அந்த மாங்காய் பழுத்து மாம்பழம் ஆனால், அதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த மாம்பழத்தை அதிகம் விரும்பி உண்பார்கள். இந்நிலையில் கடைகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றன. தற்போது மாம்பழம் அதிகமான கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதால், பொதுமக்கள் மாம்பழங்களை அதிக அளவில் வாங்கி வருகிறார்கள். எனவே கடைகளில் மாம்பழம் வாங்கும் போது பொதுமக்கள் (Mango kalappadam in Tamil) கவனத்துடன் வாங்க வேண்டும். அதாவது மாம்பழம் ஒரே மாதிரியான மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அந்த மாம்பழத்தை வாங்கி சாப்பிட வேண்டாம் என்று உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதுபோன்று ரசாயனங்களை வைத்து பழுக்க வைத்து மாம்பழங்களை (Adulterated mango) உண்பதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதால் இந்த வகை மாம்பழங்களை தவிர்ப்பது நல்லது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும் படிக்க: மக்களே உஷார்.. வெயிலுக்காக வாங்க போய் மருத்துவமனைக்கு போயிடாதீங்க.. தர்பூசணி பற்றிய அதிர்ச்சி தகவல்.. |