Homeசெய்திகள்மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழப்பு..! அதிர்ச்சியில் மக்கள்..!

மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழப்பு..! அதிர்ச்சியில் மக்கள்..!

உலக அளவில் விளையாட்டுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை பற்றி நாங்கள் கூற வேண்டாம். அனைத்து வகையான விளையாட்டுகளுக்கு அதிக அளவிலான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இந்நிலையில் கால்பந்து விளையாட்டுகளும் சமீப காலத்தில் அதிக அளவிலான ரசிகர்களை கொண்டுள்ளது.

உலக அளவில் கிரிகெட்டிற்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டு என்றால் அது கால்பந்து தான். கால்பந்து விளையாட்டிற்கு அதிக ரசிகர் இருக்க பல காரணங்கள் இருந்தாலும் அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது கால்பந்து வீரர்கள் தான். ஆம் மக்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த வீரர்கள் விளையாடுவதை பார்ப்பதற்காகவே மேட்சை பார்பது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் தற்போது கால்பந்து வீரர் (Football Player) ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த நிகழ்வு (Football Player dies)மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது கால்பந்து வீரர் மின்னல் தாக்கியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், மைதானத்தில் தனியாக நின்று பந்தின் வருகைக்காக வீரர் ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவரிடம் பந்தை பாஸ் செய்ய மற்றொரு வீரர் ஆர்வமாக உள்ளார்.

அந்த சமயத்தில் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு வீரரை மின்னல் தாக்குகிறது. இதனால் அவர் கிழே விழுகிறார். அப்போது சக வீரர்கள் வேகமாக ஓடிச் சென்று அவரை பார்க்கின்றனர். அதன் பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த செய்தி கேட்ட சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழந்த சம்பவம் (Lightning Strikes Player) மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Lightning Strikes Player
இதையும் படியுங்கள்: Pro Kabaddi 2024: டாப் 10 ரைடர்ஸ் யார் தெரியுமா?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular