நாடாளுமன்ற தேர்தல் நாளை முதல் தொடங்குகிறது. இந்த தேர்தலில் முதல் கட்டமாக நாளை (19.04.2024) தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக பல்வேறு நடிவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல சிறப்பு ஏற்பாடுகளும் (Ilavasa Perunthu) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட இந்த தேர்தலுக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டது. இந்த வரிசையில் தான் தற்போது நாளை தேர்தல் அன்ற ஓட்டு போட செல்பவர்களுக்கு இலவச பேருந்துகள் (Free Bus For Election) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி, நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிக்க வரும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பார்வை குறைபாடு உடையவர்கள் மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இன்றி (Election Free Bus) பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் இந்த சலுகையை கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச பயணத்தை மேற்கொள்ளும் வாக்காளர்கள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து எந்தவித கட்டணமும் பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மேலே கூறியவாறு 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பார்வை குறைபாடு உடையவர்கள் மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சாதாரண கட்டணம் உள்ள நகரப் பேருந்துகளில் நாளை எவ்வித கட்டணமும் இல்லாமல் பயணம் செய்யலாம். மேலும் இந்த சலுகை நாளை காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு… சிறையில் இருந்து ஆட்சி செய்ய அனுமதி கிடைக்குமா? |