தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் அதனை தொடர்ந்து இன்று (19.02.2024) தமிழகத்திற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இதற்காக சட்டப்பேரவை காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கான (Tamil Nadu Budget 2024 Schemes) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நடப்பாண்டான 2024-25-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை (Tamil Nadu Budget 2024) தமிழ்நாட்டின் நிதிதுறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல சிறப்பான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அதிலும் பெண்களுக்கான பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தான் தமிழகத்தின் மலை பகுதிகளில் வாழும் மக்களுக்கு இலவச பயண திட்டம் (Free Travel in Hills) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இத்திட்டத்தின் பெயர் விடியல் பயண திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் மலைப்பகுதியில் வாழும் பெண்கள் பலர் பயனடைந்தனர். இந்நிலையில் தான் இன்றைய தமிழக பட்ஜெட் அறிக்கையில் இந்த திட்டம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இப்பதிவில் பாரக்கலாம்.
மலைப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பயணத்திட்டத்தை விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். மேலும் இந்த திட்டம் குறித்து பேசிய அவர், இந்த விடியல் பயணத் திட்டத்தின் மூலம் பெண்கள் 444 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார். அதுமட்டுமின்றி சாதாரண கட்டணத்தில் பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 65 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்: தமிழ்நாடு பட்ஜெட் 2024: 1,100 கோடி ஒதுக்கீடு..! எதற்கு தெரியுமா? |