கடந்த சில மாதங்களாகவே பூண்டின் விலை ஆனது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூரில் பூண்டு விலை ஒரு கிலோ 500 ரூபாய்கு (Garlic Price 1 kg) விற்க்கப்பட்டது. இந்நிலையில் தான் பூண்டின் விலையானது தமிழகத்திலும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தது.
சில மாதங்களுக்கு முன்பு வரை சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் ஒரு கிலோ பூண்டின் விலை 100 ரூபாயாக இருந்தது. ஆனால் திடீரென பூண்டின் விலை அதிகரித்தது. தொடர்ந்து அதிகரித்து வந்த பூண்டின் விலை கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் 250 ரூபாயாக இருந்தது. அதோடு மட்டுமின்றி பூண்டின் விலையானது தொடர்ந்து அதிகரித்தது. ஒரு கிலோ பூண்டின் விலை (Poondu Vilai in Tamilnadu) ரூபாய் 500 வரையில் விற்பனை (Garlic Price Increase) செய்யப்பட்டது.
இந்த நிலையில் தான் தற்போது பூண்டின் விலையானது சில நாட்களாக சரிவை கண்டுள்ளது. ஏனெனில் பூண்டின் வரத்து அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் அகும். இந்தியாவை பொறுத்தவரையில் மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பார்த்தால் திண்டுக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மலை பூண்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
பூண்டின் சாகுபடி அதிகரித்துள்ளதால், வரத்தும் அதிகரித்துள்ளது எனவே பூண்டின் விலையானது படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பூண்டின் விலை ரூபாய் 500-ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரு கிலோ பூண்டின் விலையானது ரூ.250-ஆக இருந்தது.
இந்த நிலையில் தான் தற்போது ஒரு கிலோ பூண்டின் விலையானது ரூபாய் 100 குறைந்துள்ளது (Garlic Price Down), எனவே தற்போது ஒரு கிலோ பூண்டு ரூபாய் (Garlic Price in Tamil Nadu) 150-க்கு விற்பனையாகிறது. இதேபோல பீன்ஸ், முருங்கைக்காய், வெண்டைக்காய், சின்ன வெங்காயம், தக்காளி, கேரட் போன்ற அதிக விலைக்கு விற்கப்படும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் இவற்றின் விலையும் சற்று குறைந்துள்ளது.
இதையும் படியுங்கள்: மாணவிகளுக்கு ரூபாய் 1000..! அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர்..! |