Homeசெய்திகள்இந்த திட்டம் மூலம் விண்ணப்பித்தால் கேஸ் சிலிண்டர் விலை 500 மட்டுமே..! என்ன திட்டம்?

இந்த திட்டம் மூலம் விண்ணப்பித்தால் கேஸ் சிலிண்டர் விலை 500 மட்டுமே..! என்ன திட்டம்?

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் பல வீட்டு செலவுகள் இருந்தாலும் பெரிய செலவாக இருப்பது நாம் அன்றாடம் சமைக்க பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் தான். இதன் விலை தான் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் கேஸ் சிலிண்டர்களின் விலை அதிகரித்து கொண்டே தான் உள்ளது. இந்த நிலையில் தான் தற்போது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் கேஸ் சிலிண்டர் விலையில் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி கேஸ் சிலிண்டர் வெறும் 500 ரூபாய்க்கு கிடைக்கும்.

நாடு முழுவதும் உள்ள இல்லத்தரசிகள் பயன்பெறும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது அந்த வகையில் தான் தற்போது இந்த கேஸ் சிலிண்டர் விலையில் மானியத்தை (Gas Cylinder Maniyam Scheme in Tamil) அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana) ஆகும்.

சமீபத்தில் கூட தெலுங்கானா மாநில அரசு கேஸ் சிலிண்டர்களுக்கு மிகப்பெரிய திட்டம் ஒன்றை அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் வெள்ளை ரேஷன் கார்டு வைத்துள்ள எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு 500 ரூபாய் மானியம் வழங்குவதாக ரேவந்த் ரெட்டி சர்கார் அறிவித்தார்.

ஆனால் இந்த திட்டத்தின் (Gas Cylinder Subsidy Scheme in Tamil) மூலம் நேரடியாக 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படாது. கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் போது முழுத் தொகையையும் செலுத்த வேண்டும். அதன் பிறகு அவர்களில் தகுதியானவர்களுக்கு மீதப்பணம் மானியமாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் அரசு வழங்கும் மானியம் உங்கள் கணக்கில் உள்ளதா என்பதை எப்படி சரிபார்பது என்பது பலருக்கும் தெரிவது இல்லை. மேலும் சிலருக்கு வங்கிகளில் இருந்து எஸ்எம்எஸ் வருகிறது ஆனால் மற்றவர்கள் உண்மையான மானியம் வருமா என்ற குழப்பத்தில் தான் உள்ளனர்.

Gas Cylinder Subsidy Scheme in Tamil

இந்நிலையில் தான் இந்த மானியத்தில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதை நாம் எளிமையாக அறிந்து கொள்ளலாம். இதற்கு முதலில்

  • அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்,
  • அதற்கு பின் லாக் இன் செய்ய வேண்டும்.
  • பின்னர் புதிய பக்கம் ஒன்று திறக்கப்படும்.
  • இந்த பக்கத்தில் உங்கள் சிலிண்டர் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கவும்.
  • பிறகு View cylinder booking history என்பதைக் கிளிக் செய்யவும்.

இப்போது திறக்கப்படும் பக்கத்தில் உங்கள் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளதா என்ற விவரம் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் பிறகு உங்கள் பெயர் பட்டியலில் இருந்தும் மானியம் வழங்கப்படவில்லை என்றால் 1800 2333 55 என்ற கட்டணமில்லா எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம்.

இதையும் படியுங்கள்: லோகேஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் இனிமேல் ஆல்பத்தின் டீசர் வெளியானது..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular