Homeசினிமாரீ-ரிலீஸ் ஆகும் முன்பே வசூல் சாதனை படைத்த கில்லி…

ரீ-ரிலீஸ் ஆகும் முன்பே வசூல் சாதனை படைத்த கில்லி…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளவதி விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கில்லி. இந்த படம் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி ரீ-ரிலீஸ் (Ghilli Movie Re-Release) ஆக உள்ளது. தமிழ் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்பட்ட இந்த படம் ரீ-ரிலீஸ் ஆகும் முன்பாகவே வசூல் சாதனை (Ghilli Movie Created a Record) படைத்துள்ளது.

தொலுங்கியல் முன்னணி நடிகரான மசேஷ் பாபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஒக்கடு என்ற படத்தின் ரீமேக்கே கில்லி படம் ஆகும். இருப்பினும் தமிழில் விஜய் (Ghilli Movie Hero) நடித்த கில்லி திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக மாறியது. இந்த படத்தில் விஜய் -க்கு ஜோடியாக திரிஷா மற்றும் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார்கள். இந்த படத்தை (Ghilli Movie Director) இயக்குனர் தரணி இயக்கி இருந்தார்.

தற்போது சினிமா துறையில் ரீ-ரிலீஸ் கலாச்சாரம் வழர்ந்து வருகிறது. தமிழ் சினிமால் இதுவரை பாபா, ஆளவந்தான், வாரணம் ஆயிரம் ஆகிய 3 படங்கள் ரீ-ரிலீஸ் ஆகியது. இந்த படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து விஜய் மற்றும் திரிஷா நடித்த கில்லி படமும் ரீ-ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

Ghilli Movie Latest News

இந்த அறிவிப்பினால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த படம் எப்போது ரீ-ரிலீஸ் (Ghilli Movie Latest News) ஆகும் என எதிர்பார்த்தனர். இந்த கில்லி படம் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் முன்பாகவே கில்லி படம் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த கில்லி படத்திற்கு ப்ரீ புக்கிங் மட்டுமே இதுவரை 65 லட்சத்திற்கும் மேல் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க: கில்லி படத்தில் விஜய்க்கு பதிலாக நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular