Homeசினிமா19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கில்லி..! தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட் தான்..!

19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கில்லி..! தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட் தான்..!

தமிழ் சினிமாவில் மக்களுக்கு பிடித்தது போல பல படங்கள் தொடர்ந்து வெளியானாலும் மக்கள் மத்தியில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படங்கள் மீது உள்ள ஆர்வம் அதிகமாக தான் உள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு வெளியான படங்களுக்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த படங்களை எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போன்ற உணர்வுடன் பார்க்கின்றனர்.

இதன் காரணமாக தான் சில மாதங்களாகவே பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றியடைந்த திரைப்படங்களை மீண்டும் ரீரிலிஸ் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தொடர்ந்து பல படங்கள் ரீ ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இப்போது இந்த வரிசையில் தான் தற்போது நடிகர் விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்றான கில்லி திரைப்படம் மறுஒளிபரப்புக்கு (Ghilli Movie Re Release) செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் கூட விஜய் நடிப்பில் வெளியான திருமலை திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் (Ghilli Movie) கதாநாயகனாக விஜய் மற்றும் கதாநாயகியாக நடிகை திரிஷா ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படத்தில் இவர்களின் எதார்த்தமான நடிப்பு பலருக்கும் பிடித்து இருந்தது. இப்படமானது கடந்த 2004-ம் ஆண்டு வெளியானது. மேலும் இந்த கில்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Ghilli Movie Re Release

இந்நிலையில் தான் தற்போது 19 வருடங்களுக்கு பிறகு இப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஏப்ரல் மாதம் 17-ம் தேதி (Ghilli Movie Re Release Date) மீண்டும் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. இந்த செய்திக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஒரு கோடி நீ பாத்த.. நடிகர் சூரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular