HomeசினிமாVijay ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி… GOAT Movie ரிலீஸ் தேதி அறிவிப்பு…

Vijay ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி… GOAT Movie ரிலீஸ் தேதி அறிவிப்பு…

தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் படம் கோட். இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பண்டிகை காலங்கள், நடிகர் மற்றும் நடிகைகளின் பிறந்தநாள் என்றால் பொதுவாக படங்கள் தொடர்பான சிறப்பு அறிவிப்புகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் முஸ்லிம் பண்டிகையான ரம்ஜான் பண்டிகையா இன்று தளபதி விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி (VIjay GOAT Movie Release Date) அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் GOAT. இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்த மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை, புதுச்சேரி, தாய்லாந்து, ஹைதராபாத் மற்றும் இலங்கை போன்ற இடங்களில் நடந்தது. தற்போது இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.

Thalapathy VIjay Movie

இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் தளபதி விஜய். இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று எதிர்பார்த்த விஜய் ரசிகர்களுக்கு ரம்ஜான் பண்டிகை அன்று இனிப்பான செய்தியை கோட் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளார் (GOAT Movie Release Date) இயக்குனர் வெங்கட் பிரபு.

இந்த அறிவிப்பின் படி தளபதி விஜய் நடித்து வரும் கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் (GOAT Movie Release Date Announced) என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பையா படத்தில் முதலில் நடிக்க இருந்த இரண்டு பிரபல நடிகைகள்..! யார் யார் தெரியுமா?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular