தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது நடித்து வரும் படம் கோட். இந்த படத்தில் உள்ள விசில் போடு (Visil Podu Lyrical Song) என்ற முதல் லிரிக்கல் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பல சர்ச்சைகளுக்கு உள்ளானது. ஆனால் இந்த பாடல் வெளியான 24 மணி நேரத்தில் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த படத்தின் முதல் (First song in Goat Movie)லிரிக்கல் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விசில் போடு பாடலை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். மேலும் விசில் போடு பாடலை பாடியவர் நடிகர் விஜய் ஆவார்.
இந்த விசில் போடு என்ற பாடலில் நடிகர் விஜய், பிரபுதேவா மற்றும் பிரசாந்த் உள்ளிட்ட நடிபர்கள் நடினம் ஆடி உள்ளனர். இந்த பாடல் வெளியான நாளில் இருந்து அரசியல் ரீதியான பல சர்ச்சைகளை சந்தித்து வந்த நிலையில் தற்போது ஒரு சாதனையையும் படைத்துள்ளது.
கோட் படத்தின் முதல் லிரிக்கல் பாடலான விசில் போடு வெளியான 24 மணி நேரத்தில் (அதாவது 1 நாளில்) யூடியூபில் அதிக பார்வையாளர்களை கடந்த லிரிக்கல் பாடல் என்ற (Goat Movie Song Creates Record) சாதனையை படைத்துள்ளது. இந்த விசில் போடு லிரிக்கல் பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 24.8 மில்லியன் பார்வையாளர்கள் யூடியூபில் பார்த்துள்ளனர். மேலும் 1.2 மில்லியன் லைக்குகளை இந்த பாடல் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படத்தில் உள்ள அரபிக் குத்து பாடல்தான் வெளியான 24 மணி நேரத்தில் 24 மில்லியன் பார்வையாளர்களை (South India’s Most Viewed Lyrical Video Song) பெற்றிருந்தது. தற்போது அந்த பாடலையும் விசில் போடு பாடல் முந்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கங்குவா படத்திற்கு நடிகர் சூர்யா வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா..! ஏன் இவ்வளவு குறைந்த சம்பளம்..! |