தமிழ் திரைத்துறையில் பிரபல முன்னணி நடிகர்களுள் ஒருவர் தான் நடிகர் அஜித். இவரின் நடிப்புக்கு இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பல லட்சக்கணக்கான ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கிறார். இவர் நடிக்க உள்ள குட் பேட் அக்லி என்ற படத்தின் புதிய அப்டேட்(Good Bad Ugly Movie Update) ஒன்று வெளியாகி உள்ளது.
கந்த 2023 ஆம் ஆண்டு அஜித் நடித்த துணிவு படம் வெளியாகி மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை வெற்றது. இந்த துணிவு திரைப்படத்தை எச். வினோத் இயக்கினார். இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.
துணிவு டத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அஜித் நடித்துவரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி ஆவார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, ப்ரியா பவானி ஷங்கர், ஆக்ஷன் கிங் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி (Good Bad Ugly). மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் அஜித் மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளார் எனவும், மேலும் இந்த படம் வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனவும் கூறப்பட்டது.
தற்போது இந்த குட் பேட் அக்லி நாயகி பற்றிய புதிய தகவல் (Good Bad Ugly Movie Update in Tamil) ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவலின் படி இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடிக்க படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல… Manjummel Boys OTT Release Date அறிவிப்பு..! |