நம்மில் பலரும் IPL (Indian Premier League) போட்டிகளை பார்ப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். ஆனால் பாதி பேருக்கு மேல் நம்ம தல தோனியின் விளையாட்டை பார்ப்பதற்க்காகவே ஐபிஎல் மேட்ச்களைப் பார்ப்பதுண்டு.
இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் தோனி அவர்கள் பேசுகையில் இந்த ரசிகர்களின் அன்பிற்க்காக எனது உடல் ஒத்துழைத்தால் இன்னும் ஒரு சீசன் விளையாட முயற்சிப்பேன் என கூறினார். இவ்வாறு அவர் கூறியது CSK ரசிகர்களின் முகத்திலும் மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஐபிஎல் தொடரில் சிஏஸ்கே அணி விளையாட தொடங்கியதில் இருந்து அணியின் தலைவர் தல தோனி தான். கடந்த சீசன் வரை அவரே அணியை வழிநடத்தினார். ஆனால் இதற்க்கிடையில் 2022-ம் ஆண்டின் போது IPL தொடர் தொடங்குவதற்க்கு 2 நாட்கள் முன்பு தான் கேப்டன் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக CSK வீரரான ஆல்ரவுன்டர் ரவீந்திர ஜடேஜா-வை அணியின் கேப்டனாக அறிவித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கலமிறங்கிய CSK அணிக்கு அந்த சீசன் சரியாக அமையவில்லை. தொடர் தோல்விகளால் play off சுற்றுக்கு கூட செல்லாமல் வெளியேறியது. இந்த நிகழ்வு CSK ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது. ஆனால் 2022-ம் ஆண்டின் பாதியில் கேப்டன் ரவீந்திர ஜடேஜா தனது கேப்டன் பதவியில் இருந்து விலகி தோனியிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்தார். இதன் பிறகு கடந்த வருடம் 2023-ல் ரசிகர்களின் எதிபார்பிற்கு ஏற்ப CSK அணி இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையையும் கைப்பற்றியது.
தல தோனி CSK (Chennai Super Kings) அணியின் கேப்டனாக இதுவரை 5 கோப்பைகளை பெற்று தந்துள்ளார். அதுமட்டும்மின்றி CSK அணியினை ஒரு பலமான அணியாகவும் உறுவாக்கிய பெறுமை இவரையே சேரும்.
இந்த நிலையில் கடந்த வருடம் இறுதியில் தோனியின் முழங்காலில் ஏற்ப்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனவே தோனி இந்த சீசன் விளையாடுவார என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்தது. இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடைத்தரும் வகையில் நேற்று அக்டோபர் 26 பெங்களுருவில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர் நீங்கள் அனைத்து கிரிகெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளீர்கள் என்று கேட்டார் அதற்கு தோனி நான் சர்வதேச கிரிகெட்-களில் இருந்து மட்டுமே ஓய்வை அறிவித்துள்ளதாகக் கூறியுள்ளார். இத்திலிருந்து வரும் 2024 ஆண்டு IPL தொடரில் அவர் விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதோடு தனது முழங்காலில் அறுவைசிகிச்சை பற்றி பேசுகையில் நவம்பர் மாதத்திற்குள் முழுவதும் குணமடைந்துவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என கூறியுள்ளார். தோனியின் இந்த செயல் CSK ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Retired from international cricket, not IPL.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 26, 2023
MS Dhoni is raring to go in IPL 2024.pic.twitter.com/bgcO22RD84