தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் முதல் படத்திலேயே பிரபலமாவது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் அப்படி தனது முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் மீதா ரகுநாத் (Meetha Raghunath). இவர் தமிழில் முதல் நீ முடிவும் நீ என்னும் படத்தில் நடித்தார். அந்த படத்திலேயே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இப்படத்தில் இவர் பள்ளி செல்லும் மாணவி மற்றும் கல்லூரி முடித்த பெண் என இரண்டு வேறுபட்ட தோற்றத்தில் தோன்றி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். அதன் பிறகு சில வருடங்களுக்கு பிறகு வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான மணிகண்டன் நடித்த குட் நைட் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படத்தில் அனு என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு மேலும் வெற்றியை கொடுத்தது.
இளைஞர்கள் எல்லாம் தனக்கு இப்படி ஒரு மனைவி வேண்டும் என்று எண்ணும் அளவுக்கு இவரது கதாபாத்திரமும் அந்த கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்த விதமும் இருந்தது. இந்த படத்திற்கு பிறகு பிரபல நடிகையாக மாறினார் மீதா. இந்த படத்திற்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்த மீதா தற்போது திருமணம் செய்துள்ளார்.
இவருக்கு சில வாரங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் ஆன நிலையில் தற்போது அவர் திருமணம் (Meetha Raghunath Marriage) செய்துள்ளார். இவரது திருமண புகைப்படங்களை (Meetha Raghunath Marriage Photos) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: சூது கவ்வும் 2: படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு..! |