Homeசெய்திகள்Google Doodle: கூகுளின் இந்த டூடுலுக்கு ஈரான் தான் காரணம்..! என்ன நடந்தது?

Google Doodle: கூகுளின் இந்த டூடுலுக்கு ஈரான் தான் காரணம்..! என்ன நடந்தது?

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள நிறுவனம் தான் கூகுள். இந்த கூகுள் பற்றி தெரியாத மக்களே இருக்க முடியாது என்னும் அளவிற்கு கூகுள் மக்கள் மத்தியில் பிரபலம். அதிக அளவிலான மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு தேடு தளம் தான் கூகுள். இதற்கு போட்டியாக எத்தனையோ தேடு தளங்கள் இருந்தாலும் பலரும் விரும்புவது பயன்படுத்துவது இந்த கூகுளை தான்.

இந்த நிறுவனமானது தினந்தோறும் அன்றைய நாளுக்கு ஏற்றவாறு தனது டூடுலை (Google Today Doodle) மாற்றும் இது மக்களுக்கும் மிகவும் பிடித்ததாகவும் உள்ளது. இந்நிலையில் தான் இன்றும் சில காரணங்களக்காக கூகுள் ஒரு டூடுலை வைத்துள்ளது. இன்று (மார்ச் 19) வைக்கப்பட்டுள்ள டூடுலானது நவ்ரூஸ் (Nowruz) என்ற தினத்தை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் இந்த சிறப்பு டூடுலை (Today Google Doodle) வெளியிட்டுள்ளது.

இந்த நவ்ரூஸ் பண்டிகை என்பது ஈரான் நாட்டின் புத்தாண்டு தினம் ஆகும். அதாவது இந்த நவுரூஸ் என்ற சொல்லுக்கு புது நாள் என்பது அர்த்தமாகும். இந்த புத்தாண்டு தினமானது கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பண்டிகைக்குப் பின்னால் பெரிய வரலாறு உள்ளது. இந்த நாளானது வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

அதாவது எப்போதும் பனிப்பொழிவை சந்தித்து வரும் நாடுளுக்கு இந்த கோடைக் காலம் தொடங்குவதை கொண்டாடப்படும் ஒரு பண்டைய கால ஈரானிய பண்டிகை தா்ன இந்த நவுரூஸ் (Iran New Year). உலக முழுவதும் உள்ள முக்கால்வாசி நாடுகளில் ஜனவரி மாதம் 1-ம் தேதியை தான் புத்தாண்டு தினமாக கொண்டாடுகிறோம். எனினும் ஒரு சில நாடுகளில் மட்டும் அவர்களுக்கு ஏற்றார்போல வேறு தேதிகளில் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

Nowruz Iran New Year

அதேபோல தான் இந்த பாரசீக புத்தாண்டைக் குறிக்கும் சர்வதேச நவ்ரூஸ் தினம் 2024 (Nowruz Iran New Year) இன்று கொண்டப்படுகிறது. இந்த சிறப்பு தினத்திற்காக தான் கூகுள் இதுப்போன்ற சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. கூகுள் வெளியிட்டுள்ள இந்த டூடுலில் ஆழகான மலர் வடிவங்கள், பாரம்பரிய கையெழுத்து மற்றும் நவ்ரூஸ் டேபிள் (Haft-sin table) போன்ற பொருட்கள் உள்ளிட்ட பல பாரசீக கலாச்சாரத்தினை குறிப்பிடும் பொருட்களை வைத்துள்ளனர். இந்த சிறப்பு டூடுல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்: கர்ப்பிணி பெண்களுக்கு ரூபாய் 11000 நிதியுதவி..! மத்திய அரசு அறிவிப்பு..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular