Homeசினிமாஅபிராமி அபிராமி..! ரீ ரிலீஸ் ஆகவுள்ள குணா திரைப்படம்..!

அபிராமி அபிராமி..! ரீ ரிலீஸ் ஆகவுள்ள குணா திரைப்படம்..!

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் உலகநாயகன் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவர் ஒரு படத்தை எந்த அளவிற்கு வித்தியாசமாகவும் புதிய பாணியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை அறிந்து பல புதிய கதைகளங்களில் படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்துள்ளார்.

மேலும் ஒரு படத்திற்காக தன்னை எந்த அளவிற்கு அர்ப்பணிக்க முடியும் என்பதை இளம் நடிகர்கள் இவரிடம் கற்றுக்கொள்ளலாம் என்ற அளவிற்கு இவரது நடிப்பு மற்றும் இந்த கதாபாத்திரத்திற்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் இருக்கும். இந்த நிலையில்தான் இவர் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு பலரின் மனதை கவர்ந்த படமான குணா மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது (Gunaa Movie Re Release) என்று தகவல் வெளியாகிவருகிறது.

கடந்த சில மாதங்களாக பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்கள் மீண்டும் ரீ ரிலிஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் பல படங்கள் தொடர்ந்து ரிலீஸ் ஆகி வருகிறது. இந்த வரிசையில் தான் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான குணா திரைப்படம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் 1991-ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியானது. இப்படத்தை இயக்குனர் சந்தான பாரதி இயக்கி இருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக கமல்ஹாசன் நடித்து இருந்தார். மேலும் இவருடன் ரேகா, ரோஷினி, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Guna Movie

இந்நிலையில் தான் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ். இப்படம் இப்போது வரை் 70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த படம் 100 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்டுகிறது. இந்நிலையில் தான் இந்த படத்தின் இயக்குனரை பாராட்டிய குணா படத்தின் இயக்குனரான சந்தான பாரதி குணா திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்யவுள்ளதாகவும், இதற்காக கமல்ஹாசனிடம் பேசியுள்ளதாக கூறினார். எனவே இப்படம் விரைவில் ரீ ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் இந்த தலைமுறையினருக்கு மிகவும் பிடிக்கும் என்று எதிர்ப்பாரக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஜெயிலர் படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்திய நடிகை தமன்னா..! எத்தனை கோடி தெரியுமா?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular