Homeசெய்திகள்தென் மாவட்ட பயணிகள் கவனத்திற்கு – பராமரிப்பு பணிகள் காரணமாக குருவாயூர், அந்தியோதயா உள்ளிட்ட முக்கிய...

தென் மாவட்ட பயணிகள் கவனத்திற்கு – பராமரிப்பு பணிகள் காரணமாக குருவாயூர், அந்தியோதயா உள்ளிட்ட முக்கிய ரயில்கள் பகுதி நேர ரத்து!

திருவனந்தபுரம் கோட்டத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளுக்கான காரணமாக, தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தென் மாவட்டங்களை மையமாகக் கொண்ட பல முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்கள் திட்டங்களை மாற்றிக்கொள்ளும் வகையில் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691)

ஜூன் 10 இரவு 10.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் ரயில், திருநெல்வேலி – நாகர்கோவில் இடத்தில் சேவை நிறுத்தப்படும். இந்த ரயில் திருநெல்வேலியிலேயே நிறுத்தப்படும்.

நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா (20692)

ஜூன் 11 மாலை 3.50 மணிக்கு நாகர்கோவில் இருந்து புறப்படும் ரயில், நாகர்கோவில் – திருநெல்வேலி இடையில் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலியில் மாலை 5.10 மணிக்கு இயக்கத்தை துவக்கி தாம்பரத்தில் முடிக்கப்படும்.

திருச்சி – திருவனந்தபுரம் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (22627)

ஜூன் 11 காலை 7.20 மணிக்கு புறப்படும் ரயில், திருநெல்வேலி – திருவனந்தபுரம் வரை பகுதி நேர ரத்து செய்யப்படும். இதுவும் திருநெல்வேலியில் நிறுத்தப்படும்.

திருவனந்தபுரம் – திருச்சி (22628)

ஜூன் 11 காலை 11.35 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில், திருவனந்தபுரம் – திருநெல்வேலி வரை ரத்து செய்யப்படும். இந்த ரயில் மதியம் 2.25 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து தொடரும்.

எழும்பூர் – குருவாயூர் (16127)

மே 24 காலை 10.20 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில், சாலக்குடி – குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. சாலக்குடியில் ரயில் நிறுத்தப்படும்.

ஹவுரா – கன்னியாகுமரி (12665)

ஜூன் 9 மாலை 4 மணிக்கு ஹவுராவில் இருந்து புறப்படும் ரயில், வள்ளியூர் – கன்னியாகுமரி வரை சேவை ரத்து. வள்ளியூரில் நிறுத்தப்படும்.

நாகர்கோவில் – கோவை (16321)

ஜூன் 11 காலை 8 மணிக்கு நாகர்கோவில் இருந்து புறப்படும் ரயில், நாகர்கோவில் – வள்ளியூர் வரை ரத்து செய்யப்படுகிறது. வள்ளியூரில் இருந்து காலை 8.26 மணிக்கு தொடரும்.

பயணிகள் இந்த மாற்றங்களை அறிந்து, தங்கள் பயண திட்டங்களை முந்தையதிலிருந்தே திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. முக்கியமான பயணங்கள் அல்லது டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன், ரயில்வே இணையதளங்களில் அல்லது ரயில்வே உதவி மையங்களில் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

RELATED ARTICLES

Most Popular