Happy New Year Wishes பற்றி இப்பதிவில் பார்க்க உள்ளோம். அதனை பார்ப்பதற்கு முன்பு நியூ இயர் பற்றி பார்க்கலாம். புதிய வருடத்தின் தொடக்க நாளை உலகம் முழுவதும் புத்தாண்டு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இது ஆங்கில நாட்காட்டியில் முதல் நாளில் வருகிறது. இந்த பண்டிகையை ஒவ்வொருவரும் ஒரு விதமாக கொண்டாடுகின்றனர். இன்னும் சில நாட்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. எனவே அதனை நாம் சிறந்த முறையில் வரவேற்க வேண்டும்.
இந்த பண்டிகையில் நாம் செய்யும் முக்கியமான செயல்களில் ஒன்று நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை கூறுவதும், வாழ்த்து கவிதைகள் உள்ள புகைப்படங்கள் அகியவற்றை பகிர்வதும் ஆகும்.
முன்பெல்லாம் வாழ்த்துக்களை அஞ்சல் மூலம் அனுப்புவார்கள். ஆனால் தற்போது Whatsapp, Facebook, Instagram போன்ற செயலிகள் மூலம் எளிமையான முறையில் பகிர்கிறோம். ஆனாலும் வாழ்த்து கவிதைகளுடன் அழகிய புகைப்படங்கள் கிடைப்பது சற்று சிரமமாக தான் உள்ளது. ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். நம்முடைய Infothalam பக்கத்தில் ஈஸியாக எடுத்து உங்களின் பிரியமான சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பலாம். இப்பதிவில் Happy New Year Wishes 2024 பற்றி பார்க்கலாம் வாங்க..
Table of Contents
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024 (Happy New Year 2024 Wishes In Tamil with HD Images)
புத்தாண்டு 2024 (New Year 2024)
- இந்த இனிய புத்தாண்டு
உங்களுக்கு ஒரு இனிய
சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
- புத்தாண்டு தினம் என்பது வெற்று புத்தகத்தின் முதல் பக்கம்: ஒரு அற்புதமான கதையை எழுதுங்கள்!
- எதிர்காலம் என்பது உங்கள் வாழ்க்கை கதையை எழுதுவது… அடுத்த ஆண்டை இன்னும் சிறந்ததாக மாற்றுங்கள்.
- புத்தாண்டு என்பது வெற்று புத்தகம் போன்றது, பேனா உங்கள் கையில்..
- புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2024 உங்களுக்கான ஆண்டு!
குடும்பத்தினருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (Happy New Year Wishes For Family Members)
- புத்தாண்டில்
புதிய சிந்தனை
புதிய முயற்சி
புதிய எண்ணங்கள் பூக்கட்டும்
நட்புகளுக்கும்
சொந்தங்களுக்கும்
உயிரோடு இணைந்த உறவுகளுக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (Happy New Year Wishes For Friends)
- புதிய ஆண்டு, புதிய தொடக்கங்கள் மற்றும் அதே நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!
சிறிய புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் (Short New Year Wishes in Tamil)
- இனிமையான நினைவுகளோடு
இந்த ஆண்டை கடப்போம்
இனி வரும் காலம் இனிதே
உதயமாகட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சிறந்த நண்பருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் (New Year Wishes for Best Friend)
- இந்த வருடம் உங்களுக்கு சிறந்த நண்பராக இருப்பேன் என்று நம்புகிறேன். நீங்கள் எனக்குக் கொடுக்கும் நட்புக்கு நான் தகுதியானவனாக இருக்க விரும்புகிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தொழில்முறை புத்தாண்டு வாழ்த்துக்கள் (Professional New Year Wishes)
- இந்த ஆண்டு நாங்கள் சாதித்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறோம். இந்த வெற்றி பயணம் அடுத்த ஆண்டும் தொடரட்டும்.. குழுவினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
முக்கியமான நபருக்கான புத்தாண்டு செய்திகள் (New Year Messages for Special Someone)
- உங்கள் இருப்பு மட்டுமே எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, இந்த ஆண்டு எங்களுடன் ஒரு வலுவான உறவைப் பிணைக்கட்டும்.
புத்தாண்டு வாழ்த்து செய்திகள் (Happy New Year Messages)
- உங்களுக்கு இந்த ஆண்டு இன்னும் சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்! நீங்கள் இதற்கு மிகவும் தகுதியானவர்!
கணவருக்கு கூறும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (Happy New Year Wishes for Husband)
- வாழ்கையை கொண்டாடுங்கள்
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்
என்னவனுக்கு உன்னவளின்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
மனைவிக்கு கூறும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (Happy New Year Wishes for Wife)
- என் அன்பான மனைவிக்கு, இந்த புத்தாண்டில் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் உன் மகிழ்ச்சியான முகத்தைப் பார்க்க விரும்புகிறேன். இந்த புத்தாண்டில் உன் வாழ்க்கையை இனிமையான நினைவுகளால் நிரப்புவோம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மேற்கோள் செய்திகள் (Happy New Year Wishes Quotes Messages)
- விரும்பிய யாவும் கிடைக்கபெற்று
மன நிம்மதியும் சந்தோசமும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்துக்கள் (Puthandu Vazthukal)
- புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும். மாற்றங்கள் மலரட்டும். எல்லோருடைய வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் (Angila Puthandu Vazthukal)
புது வருடம்.. புது நாளில் உங்கள் எல்லா துன்பங்களும் கரைந்து வாழ்வில் மகிழ்ச்சி பொங்க அனைவரும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024 (New Year Wishes 2024 Tamil)
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு
பிரகாசமாகவும்,
மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புத்தாண்டு 2024 வாழ்த்துக்கள் (Puthandu 2024 Wishes in Tamil)
கடந்த காலத்தை மறந்து புதிய
தொடக்கத்தைக் கொண்டாட வேண்டிய நேரம் இது.
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு தமிழ் வாழ்த்துக்கள் (New Year Tamil Wishes)
- என் நேசத்துக்குரிய நண்பரான உங்களுடன் நினைவுகளை உருவாக்கும் மற்றொரு வருடம் இங்கே. புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (Happy New Year Quotes)
- ஒரு புதிய மலர் நறுமணத்தையும் புத்துணர்ச்சியையும் பரப்புவதைப் போல, புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அழகையும் புத்துணர்ச்சியையும் சேர்க்கட்டும்.
- இந்த வருடம் உங்களுக்கு சிறந்த நண்பராக இருப்பேன் என்று நம்புகிறேன். நீங்கள் எனக்குக் கொடுக்கும் நட்புக்கு நான் தகுதியானவனாக இருக்க விரும்புகிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- உங்கள் விருப்பமான இலக்குகளை அடையவும், ஓய்வெடுக்க போதுமான நேரத்தையும், புதிய இலக்குகளை அடையவும் நான் விரும்புகிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், என் அன்பான நண்பரே!
- நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, உங்களைப் போன்ற ஒரு நண்பர் எனக்கு கிடைத்ததால். உங்கள் எளிய சைகைகள் கூட என்னை உங்களுக்கு முக்கியமானதாக உணர வைக்கிறது. உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
- உங்களுடன் நினைவுகளை உருவாக்க இதோ இன்னொரு வருடம், என் அன்பிற்குரிய நண்பரே. புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- புதிய ஆண்டு, புதிய தொடக்கம், 2024 இல் உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்!
- என் வாழ்வின் மிக அழகான தருணம் நான் உன்னை முதன்முதலில் சந்தித்ததுதான். அப்போதிருந்து, நீ எல்லா நிலைகளிலும் எனக்காக எப்போதும் நிற்கிறாய். ஒரு அற்புதமான வாழ்க்கைத் துணையாக இருப்பதற்கு நன்றி, என் இனிய உறவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- நிறைந்த வளம் மிகுந்த சந்தோசம்
வெற்றி இவற்றை
எல்லாம் இந்த
இனிய புத்தாண்டு
உங்களுக்கு கொண்டுவரட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
- இந்த இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும்
நீங்களும் எல்லா வளமும்
நலமும் பெற வேண்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
- போனதெல்லாம் போகட்டும்
வரும் பொழுது நல்லதாக அமையட்டும்
நண்பர்கள் மற்றும் உறவுகள்
அனைவருக்கும் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
- என் மனதிற்கினிய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு தின வாழ்த்துக்கள்.
- உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சியைப் பெறுவதற்கான நல்ல ஆண்டாக இந்த 2024 அமையட்டும்.
- கோபங்கள் நீங்கி அன்பை மட்டும் செலுத்தும் நாளாக இந்த புத்தாண்டு உங்களுக்கு அமைய என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.
- புதுமைகளோடு உங்களது வெற்றிக்கான பயணத்தை இனிதே தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
- பழையவற்றை மறந்து புதிய வாழ்க்கையை இந்தாண்டு முதல் தொடர என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.
புத்தாண்டை கொண்டாடுவது எப்படி (How to Celebrate New Year)
- புத்தாண்டு என்பது புதிய தொடக்கத்தின் ஒரு முக்கிய நாள் ஆகும். இதனை நம் வீட்டில் இருந்தே தொடங்கலாம். எனவே முதலில் உங்களுடைய வீட்டினை நன்றாக சுத்தம் செய்து, கோலம் இடுவது போன்ற செயல்கள் மூலம் வீட்டை அழகுபடுத்தலாம்.
- நம் வீட்டில் உள்ள நுழைவாயில்களை மாவிலை மற்றும் பூக்கள் கொண்டு அழகுப்படுத்தலாம். மேலும் அரிசி மாவு கோலமிட்டு அதன் மீது விளக்கு ஏற்றி வைக்கலாம்.
- நம் வாழ்வின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று உணவு. எனவே புத்தாண்டு அன்று நாம் அறுசுவை உணவு சமைத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியாக பேசி சிரித்து சாப்பிடலாம்.
- புத்தாண்டினை இன்னும் சிறப்பாக மாற்ற புத்தாண்டு அன்று குறைந்தபட்சம் ஒரு செடி அல்லது மரமாவது நட்டு பராமரிக்க தொடங்கலாம்.
- மேலும் அன்றைய நாள் முழுக்க குடும்பத்தில் உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடலாம். இயலாதவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம்.
இதையும் படியுங்கள்: பிளம் கேக் செய்வது எப்படி |
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்….
FAQ – புத்தாண்டு வாழ்த்துக்கள் |
1. இந்த வருடம் எந்த கிழமையில் புத்தாண்டு வருகிறது?
இந்த வருடம் புத்தாண்டு திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.
2. முதலில் புத்தாண்டு கொண்டாடும் நாடு எது?
இந்திய நேரப்படி பசிபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா, கிரிபாட்டி நாடுகளில் முதன் முதலாக புத்தாண்டு பிறக்கிறது.
3. கடைசியாக புத்தாண்டு கொண்டாடும் நாடு எது?
பேக்கர் தீவு இதுவே புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடு ஆகும்.