Homeசெய்திகள்பெங்களூருவில் கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் – மின்சாரம், சுவர் இடிந்து 3 பேர் உயிரிழப்பு!

பெங்களூருவில் கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் – மின்சாரம், சுவர் இடிந்து 3 பேர் உயிரிழப்பு!

பெங்களூருவில் கடந்த வாரமாகப் பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது. மின்சாரம் தாக்கியும் சுவர் இடிந்தும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் படை நடத்திய ரப்பர் படகு ரெஸ்க்யூ, அதிகாரபூர்வ எச்சரிக்கை விவரங்கள் இதோ!

பெங்களூரு நகரம் மழையின் தாக்கத்தில் சில நாட்களாக literal-ஆக மூழ்கிக் கொண்டிருக்கிறது.
கடந்த ஏழு நாட்களாக மாலை, இரவு நேரங்களில் பெய்துவரும் கனமழை, தற்போது நகரத்தின் பல பகுதிகளை வெள்ளத்தில் சிக்கவைத்துள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால், பொதுமக்கள் தீவிர சிரமத்தில் உள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் நிலை மோசம்!

    • சாய் லேஅவுட், ஹென்னூர், பைரத்தி, கோரமங்கலா, சில்க் போர்ட், எலஹங்கா உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
    • மாடிகட்டடங்கள், வீட்டுப்பிரிவுகள், பார்கிங் பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.
    • வாகனங்கள், வீட்டு உபகரணங்கள் சேதமடைந்தன.

    மீட்பு படையினர் ரப்பர் படகு மூலம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    மின்சாரம், சுவர் இடிந்து உயிரிழப்பு!

    இந்த திடீர் மழைத் தாக்கம், மூன்று உயிர்களை பறித்துள்ளது:

    1. மின்சாரம் தாக்கி – 63 வயது மனோகர் காமத் மற்றும் 14 வயது தீபக் ஆகியோர்
    2. சுவர் இடிந்து விழுந்ததில் – 48 வயதான மஞ்சுளா உயிரிழந்தார் (மாரத்தஹள்ளி பகுதியில்)

    மாரத்தஹள்ளி, ஹெச்.ஏ.எல், ஹென்னூர் உள்ளிட்ட பகுதிகளில் 105.5 மிமீ மழை பதிவானது

    கடந்த 100+ ஆண்டுகளில் மே மாதத்தில் வந்த இரண்டாவது மிகப்பெரிய மழை –

    • 1909 → 153.9 மிமீ
    • 2025 → 136 மிமீ (நேற்று முன் தினம்)

    மழையுடன் கூடுதலாக வீசிய வலுவான காற்றால் 30-க்கும் மேற்பட்ட மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் நகரத்தில் போக்குவரத்து முழுமையாக ஸ்டக்காகியுள்ளது.

    அடுத்த 48 மணி நேர எச்சரிக்கை!

    அடுத்த 48 மணி நேரத்துக்குள் 64.5 மிமீ – 115.5 மிமீ வரை மழை பெய்யலாம். கர்நாடக கடலோர மற்றும் மலைப்பகுதிகளில் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மக்கள் கவனிக்க வேண்டியவை:

    • நீர் தேங்கிய இடங்களை தவிர்க்கவும்
    • மின்சாரம் பூட்டிய பகுதிகளுக்கு அருகே செல்ல வேண்டாம்
    • வீடுகளில் உள்ள மின்சாரம், தாழ்வான வாசல்கள், பைக்/கார் பார்க்கிங் பகுதிகளை பாதுகாப்பு கவனத்துடன் பார்க்கவும்
    • தேவையான இடங்களில் அரசு மீட்புப் படைகளுடன் தொடர்பில் இருங்கள்
    RELATED ARTICLES

    Most Popular