கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி பிரதமர் மோடி அவர்கள் ஐக்கிய அரபு நாட்டின் தலைநகரான அபுதாபியில் இந்து கோயிலை (Abu Dhabi Hindu Temple) திறந்து வைத்தார். இந்த கோவிலானது கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அபுதாபி சென்றிருந்தபோது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் கோயில் கட்ட 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார்.
அதுமட்டுமின்றி அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் 13.5 ஏக்கர் நிலத்தை 2019-ம் ஆண்டு கொடுத்தது. இதைத்தொடர்ந்து மொத்தம் 27 ஏக்கர் நிலத்தில் இந்த கோயிலை கட்டத் தொடங்கினர். இந்த கோயிலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த கோயில் (Abu Dhabi Hindu Temple) முழுவதும் மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலி மார்பிள் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோயிலில் மொத்தம் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரங்கள் அனைத்தும் அபுதாபியின் சிறந்த கட்டிடங்களின் அடையாளமாக திகழ்கிறது.
நிலநடுக்கம், மற்றும் அதிக அளவிலான வெப்பம் போன்றவற்றால் இந்த கோயில் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கோயிலுக்கு அடியில் 100 சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் இக்கோயிலானது மொத்தமாக 400 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹம் செலவில் கட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 14-ம் தேதி திறக்கப்பட்ட இந்த கோயில் சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் அனுமதிக்காக திறக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த கோயிலில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இக்கோயில் பொதுமக்கள் வருகையால் கலைக்கட்டியுள்ளது.
இதையும் படியுங்கள்: அரசியலில் இருந்து விலகுகிறார் பாஜக எம்.பி கவுதம் கம்பீர்..! என்ன காரணம்..! |