Homeசெய்திகள்Election 2024: திரையரங்கு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது…

Election 2024: திரையரங்கு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது…

ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகம் உள்பட ஆறு மாநிலங்களில் மக்களவை தேர்தல் முதல் கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் வர இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் தெடர்பான பல செய்திகள் அடுத்து அடுத்து வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் திரையரங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி (Holiday for Theatre Workers) உள்ளது.

தேர்தலில் வாக்களிப்பது என்பது அனைத்து மக்களின் ஜனநாயக கடமை ஆகும். எனவே அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தேர்தல் அன்று விடுமுறையில் இருந்தால் அவர்கள் வேக்களிக்க எளிதாக இருக்கும் என்பதற்காக. தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி கடைகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை விடவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பை மீறி மக்களவைத் தேர்தல் (Lok Sabha Election) நடைபெறும் நாளான ஏப்ரல் 19 ஆம் தேதி (19.04.2024) எந்த ஒரு நிறுவனமானது ஊழியர்களுக்கு விடுமுறை வழங்காமல் இருந்தால் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிறுவனங்களை கண்காணிக்கும் வகையில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Lok Sabha Election

இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை தொடர்ந்து திரையரங்கு ஊழியர்களுக்கும் மக்களவைத் தேர்தல் அன்று விடுமுறை (Thiraiyarangu Uliyargal ku Vidumurai) அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் (Tamilnadu Theatre and Multiplex Owners Association) தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: பாதம் தாங்கிய பழனிசாமி..! பிரச்சாரத்தில் உதயநிதி பேச்சு..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular