Homeசினிமா800 கோடி சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குனர்..! யார் தெரியுமா?

800 கோடி சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குனர்..! யார் தெரியுமா?

திரைப்பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு சம்பளம் அதிகமாக தான் இருக்கும் என்று நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் இயக்குனர் ஒருவர் ரூபாய் 800 கோடியை ஒரு படத்திற்கு சம்பளமாக பெறுகிறார். இந்த தகவல் தற்போது வெளியாகி பலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் இயக்குனரான கிறிஸ்டோபர் நோலன் (Hollywood Director Christopher Nolan) தான் ஒரு படத்திற்கு 800 கோடி சம்பளமாக பெறுகிறார். இவரது முழு பெயர் கிறிஸ்டோபர் எட்வர்ட் நோலன் ஆகும். இவர் 1970-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி பிறந்துள்ளார். இவர் ஒரு பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.

இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் சிக்கலான கதைக்களத்துடன் மக்களுக்கு மிகவும் பிடித்த வாறும் இருக்கும். மேலும் ஹாலிவுட் திரையுலகில் பல பிளாக்பஸ்டர் படங்களை இவர் கொடுத்துள்ளார். இவர் இந்த 21 ஆம் நூற்றாண்டின் முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் உள்ளார். இவரது (Movie Directer Christopher Nolan) படங்களின் வசூல் எப்போதும் அதிகமாகதான் இருக்கும்.

Movie Directer Christopher Nolan

இந்த வருடம் கூட இவரது இயக்கத்தில் வெளியான ஓபன்ஹெய்மர், இன்டெர்ஸ்டெல்லர், டெனட், டன்கிரிக் மற்றும் இன்செப்சன் உள்ளிட்ட எட்டு திரைப்படங்கள் பாக்ஸ்ஆபிஸில் 1000 கோடி வசூல் செய்தது. அதிலும் குறிப்பாக ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் சமீபத்தில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் 7 விருதுகளை வென்றது. மேலும் இந்த படமாது உலகம் முழுவதும் 8,200 கோடியை வசூல் செய்தது.

இந்நிலையில் தான் தற்போது இந்த படத்தில் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் (Film Director Christopher Nolan) ஒரு படத்திற்கு 800 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பல திரைபிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: சச்சினின் 29 வருட சாதனையை முறியடித்த இளம் வீரர்..! யார் அவர்?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular