Honda Dio Scooters பற்றிய முழு விவரங்களையும் இப்பதிவில் பார்க்க உள்ளோம். அதற்கு முன்னர் நாம் ஹோண்டா நிறுவனம் பற்றி பார்க்கலாம். இந்த ஹோண்டா நிறுவனம் பல வருடங்களாக வாகன விற்பனையில் முன்னிலையில் உள்ள நிறுவனம் ஆகும். மேலும் இந்த நிறுவனமானது இதுவரை பல வகையான புதிய வகை Bikes மற்றும் Scooter-களை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த Honda நிறுவனம் உலகின் மிக பெரிய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது. மேலும் இந்த நிறுவனமானது ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு பன்னாட்டு கூட்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பல வகையான ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளை உற்பத்தி செய்கிறது.
Table of Contents
ஹோண்டா டியோ ஸ்கூட்டர்ஸ் (Honda Dio Scooters)
இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகும் இரு சக்கர வாகனங்களில் முன்னிலையில் உள்ள வாகனங்களில் ஒன்று தான் Honda Dio Scooty. மேலும் இந்த வாகனமானது இந்திய அளவில் முதல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டராகவும் உள்ளது. இந்த ஹோண்டா ஸ்கூட்டர்கள் பல புதிய என்ஜின் மாடல்களில் வெளியாகியுள்ளன. இந்த டியோ வகை ஸ்கூட்டர்கள் எப்பொழுதும் ஒரு பீரீமியம் லுக் தருவதால் பலரும் இந்த வாகனத்தினை விரும்புகின்றனர்.
Honda Dio Price: ₹68,625 – ₹97,500
Honda Dio On Road Price: ₹ 74,231
Honda Dio Mileage: 50 KM/L
Types Of Honda Dio Scooters
- Honda Dio 125
- Honda Dio 110
- Honda Dio Sports
- Honda Dio Repsol Edition
ஹோண்டா டியோ 125 (Honda Dio 125)
இன்றுவரை பலவிதமான ஸ்கூட்டர்களை பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தினாலும், இந்தியாவில் முதல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் என்று அழைக்கபடுவது இந்த ஹோண்டா டியோ ஸ்கூட்டர் தான். இந்த ஸ்கூட்டர் 125CC மாடலில் புதுப்பொலிவுடன் அறிமுகப்பட்டுத்தப்பட்டது.
இந்த Honda Dio 125 ஸ்கூட்டர் பார்ப்பதற்கு ஸ்டாண்டர்ட் மாடல் டியோவை போல இருக்கும் ஆனால் இந்த மாடல் ஸ்கூட்டர் அதிக திறன் கொண்ட 125cc என்ஜினை கொண்டுள்ளது. இந்த வகையான என்ஜின் Honda Activa 125 மற்றும் Grazia 125 ஆகிய ஸ்கூட்டர்களில் இருக்கும்.
ஹோண்டா டியோ 125 விலை (Honda Dio 125 Price) | ₹83,400 – ₹97,500 |
ஸ்கூட்டரின் எடை (Honda Dio 125 Weight) | 104 to 105 kg |
ஸ்கூட்டரின் உயரம் (Honda Dio 125 Hight) | 1.15 to 1.17 M |
ஸ்கூட்டரின் வேகம் (Honda Dio 125 Mileage) | 48 KMPL |
ஹோண்டா டியோ 110 (Honda Dio 110)
ஹோண்டா நிறுவனம் புதிதாக பல விதமான ஸ்கூட்டர்களை தொடர்ந்து அறிமுகப்படுத்திவருகிறது. இந்த வரிசையில் தான் Honda Dio 110 அறிமுகப்படுத்தியது. இந்த வகை ஸ்கூட்டர்கள் மேம்படுத்தப்பட்ட நிறம் மற்றும் எச் ஸ்மார்ட் எனப்படும் ரிமோட் கன்ட்ரோல் வசதியுடன் கூடிய கீ ஆகியவற்றினை கொண்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தில் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.
ஹோண்டா டியோ 110 விலை (Honda Dio 110 Price) | ₹70,211 – ₹85,140 |
ஸ்கூட்டரின் எடை (Honda Dio 110 Weight) | 105 kg |
ஸ்கூட்டரின் உயரம் (Honda Dio 110 Hight) | 1.15 M |
ஸ்கூட்டரின் வேகம் (Honda Dio 110 Mileage) | 50 KMPL |
ஹோண்டா டியோ BS6 (Honda Dio BS6)
இந்திய அளவில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் முன்னணியில் இருப்பது ஹோண்டா டியோ பிஎஸ்6 என்ற வகையான ஸ்கூட்டர்கள் தான். இந்த வகை ஸ்கூட்டர்கள் அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட இந்த ஸ்கூட்டரின் விலை உயர்த்தப்பட்டது. இந்த Honda Dio BS6 ஸ்கூட்டரில் 109.51 வகை சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா டியோ BS6 விலை (Honda Dio BS6 Price) | ₹ 74,231 |
ஸ்கூட்டரின் எடை (Honda Dio BS6 Weight) | 103 kg |
ஸ்கூட்டரின் உயரம் (Honda Dio BS6 Hight) | 1.15 M |
ஸ்கூட்டரின் வேகம் (Honda Dio BS6 Mileage) | 48 KMPL |
Honda Dio BS6 Colours
- Sports Red2
- Jazzy Blue Metallic
- Mat Axis Grey Metallic
- Mat Sangria Red Metallic
- Dazzle Yellow Metallic
Honda Dio Sports
இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் பல விதமான ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் ஹோண்டாவின் சிறந்த படைப்புகளில் ஒன்று தான் இந்த Honda Dio Sports Scooter.
இந்த வகை ஸ்கூட்டர்களில் 110cc PGM Fi என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஸ்மார்ட் பவர் (eSP)வசதியும் உள்ளது. இந்த Honda Dio Sports ஸ்கூட்டரில் டூயல் சுவிட்ச், வெளிப்புற பியூயல் லிட் மற்றும் சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர், என்ஜின் கட் ஆப் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் விலை (Honda Dio Sports Price) | ₹69,125 – ₹82,054 |
ஸ்கூட்டரின் எடை (Honda Dio Sports Weight) | 105 kg |
ஸ்கூட்டரின் உயரம் (Honda Dio Sports Height) | 1.15 M |
ஸ்கூட்டரின் வேகம் (Honda Dio Sports Mileage) | 50 KMPL |
இதையும் படியுங்கள்: Poco C65: 8,400 ரூபாயில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்… |
Honda Dio Repsol Edition
Honda Dio Scooter-களில் முக்கியமான மற்றும் இந்தியாவில் முன்னணி 125cc ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர்களில் ஒன்று Honda Dio Repsol Edition. இந்த வகை வாகனங்கள் Honda GP வகை பைக்குகளின் அதே டிசைனை கொண்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தில் உள்ள என்ஜின் மற்றும் டிசைன் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை.
ஹோண்டா டியோ ரெப்சோல் விலை (Honda Dio Repsol Edition Price) | ₹70,973 – ₹77,534 |
ஸ்கூட்டரின் எடை (Honda Dio Repsol Edition Weight) | 103 kg |
ஸ்கூட்டரின் உயரம் (Honda Dio Repsol Edition Hight) | 1.15 M |
ஸ்கூட்டரின் வேகம் (Honda Dio Repsol Edition Mileage) | 50 KMPL |
இப்பதிவில் நாம் ஹோண்டா டியோ ஸ்கூட்டர்களின் வகைகள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்கள் ஆகியவற்றினை பற்றி பார்த்துள்ளோம். இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
Honda Dio
இப்பதிவில் Honda Dio Scooter-கள் பற்றிய தகவல்கள் மற்றும் சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Product Brand: Honda
Product Currency: INR
Product Price: 74231
Product In-Stock: InStock
4.5
இதையும் படியுங்கள்: ஹோண்டா ஸ்கூட்டர் மாடல்கள் 2024: Honda Scooter Models 2024 in Tamil..! |
ஹோண்டா டியோ – FAQ
1. ஹோண்டா டியோ விலை? Honda Dio Price?
ஹோண்டா டியோ விலை ஸ்கூட்டரின் விலை ₹68,625 – ₹97,500 ஆகும்.
2. ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் மைலேஜ் என்ன? What is the mileage of Honda Duo scooter?
ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் மைலேஜ் 50 KMPL