இணையத்தில் வெளியான தகவல்களின்படி, ஹானர் நிறுவனம் தனது புதிய தலைமுறை ஸ்மார்ட்போன்கள் ஆன ஹானர் 400 மற்றும் ஹானர் 400 ப்ரோ மாடல்களை 2025-ம் ஆண்டு மே 28ஆம் தேதி சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தொடர், கடந்த ஹானர் 300 தொடர் மாடல்களை விட பல அம்சங்களில் முன்னேற்றங்களை கொண்டுள்ளது. குறிப்பாக, பேட்டரி திறன், கேமரா செயல்திறன் மற்றும் சிப்செட் ப்ராசசர் உள்ளிட்ட பகுதிகளில் புதிய பரிணாமங்களை கொண்டுவந்திருக்கிறது. ஐரோப்பிய சந்தைகளில் இந்த மாடல்கள் மே 22 தேதி அன்று வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹானர் 400 ப்ரோ – சிறப்பம்சங்கள்:
ஹானர் 400 ப்ரோ மாடல், ஒரு ஸ்மார்ட்போனாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில் 200 மெகாபிக்சல் முக்கிய கேமரா, 50 மெகாபிக்சல் டெலிபோட்டோ கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா ஆகிய மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன. இது பயனர்களுக்கு வண்ணம் மற்றும் விவரங்களை மிக நுணுக்கமாகப் பதிவு செய்யும் திறனை வழங்குகிறது. முன்புறத்தில், 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது, இது உயர்தர வீடியோ கால் மற்றும் புகைப்பட அனுபவத்தை வழங்கும்.
இத்துடன், ஹானர் 400 ப்ரோ மாடல் IP68 மற்றும் IP69 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ட் சான்றுகள் பெற்றிருப்பது, இது உயர் தரமான பாதுகாப்பை உறுதி செய்கிறது.
ஹானர் 400 – சிறப்பம்சங்கள்:
ஹானர் 400 மாடலிலும் 200 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா உள்ளது. முன்புற செல்ஃபி கேமரா இந்த மாடலிலும் 50 மெகாபிக்சல்தான். இந்த மாடல் IP66 தர சான்று பெற்றுள்ளது. இதில் வாட்டர் மற்றும் டஸ்ட் பிராடெக்ஷன் இருக்கும், ஆனால் ப்ரோ மாடலைவிட ஓரளவு குறைவாகவே இருக்கலாம்.
பேட்டரி மற்றும் சார்ஜிங் தொழில்நுட்பம்:
இந்த இரு மாடல்களிலும் மிக உயர்ந்த திறன் கொண்ட, 7,200mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது, பழைய ஹானர் 300 தொடரில் இருந்த 5,300mAh பேட்டரியைக் காட்டிலும் 36% அதிக திறன் கொண்டதாகும். ஹானர் 400 ப்ரோ மாடலில் 100W வயர்டு சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. ஹானர் 400 மாடலில் 80W வயர்டு சார்ஜிங் மட்டுமே உள்ளது.

செயலி (Processor) மற்றும் சாப்ட்வேர்:
ஹானர் 400 ப்ரோ மாடலில் மிக சக்திவாய்ந்த Snapdragon 8 Gen 3 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, உயர்தர கேமிங், வீடியோ எடிட்டிங், மல்டிடாஸ்கிங் போன்ற பல அம்சங்களை மென்மையாக இயக்க உதவும். ஹானர் 400 மாடலில் Snapdragon 7 Gen 3 சிப்செட் உள்ளது, இது ஒரு மிட்-ரேஞ்ச் விலையில் சிறப்பான செயல்திறன் வழங்கக்கூடியது. இரண்டும் Android 15 அடிப்படையிலான Magic OS 9 இயங்குதளத்தில் இயங்கும்.
டிஸ்பிளே அம்சங்கள்:
இரு மாடல்களிலும், 1.5K (1280 x 2800 pixels) ரெஸல்யூஷன் கொண்ட OLED டிஸ்ப்ளே, 120Hz Refresh Rate, மற்றும் அதிகபட்சமாக 5000-nits Peak Brightness வழங்கப்படுகின்றது. இது பிரகாசமான வெளி சூழலிலும், சீரான பார்வை அனுபவத்தை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.