HomeHow toபாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி? How to Apply Passport in Tamil..!

பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி? How to Apply Passport in Tamil..!

பாஸ்போர்ட் என்பது ஒரு நபரின் அடையாளத்தையும், ஒருவரின் தேசியத்தையும் சரிபார்க்க அரசால் வழங்கப்படுகின்ற சட்டப்பூர்வமான ஆவணம் ஆகும். இந்த பாஸ்போர்ட் ஆனது அடிப்படையான விவரங்களான, புகைப்படம், பெயர், பிறந்த தேதி மற்றும் தனிப்பட்ட அடையாளக் குறியீடு போன்ற விவரங்களைக் கொண்டிருக்கும். இதனை கடவுச்சீட்டு என்றும் அழைப்பார்கள். இந்த பாஸ்போர்ட்-ஐ சர்வதேச பயணங்களை மேற்கொள்வதற்கு அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அடிக்கடி மற்ற நாடுகளுக்கு பயணம் செய்யபவர்கள் விசா பெறுவதற்கான முக்கிய ஆவணமாக உள்ளது.

இந்த பாஸ்போர்ட் மற்ற நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு மட்டுமல்லாமல், வங்கிக் கணக்கைத் திறப்பது மற்றும் அரசாங்க சேவைகளைக் பெறுவது போன்ற பல சூழல்களில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடையாள அட்டையாகவும் பாஸ்போர்ட்டுகள் உள்ளன. பொதுவாக, பாஸ்போர்ட் என்பது அடையாளம், பயணம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய ஆவணமாக உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு எல்லாம் Passport Apply செய்து பெறுவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால் தற்போது அப்படி இல்லை எளிமையான முறையில் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Passport Apply Online in Tamil இதனை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Table of Contents

ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்யும் முறை (Passport Apply In Online)

Step 1: அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுதல்

Passport Apply
  • அதிகாரப்பூர்வ இணையதளமான passportindia.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். முன்னதாகவே கணக்கு இருந்தால் அதில் பதிவு செய்யலாம். ஆனால் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதால் New User Registration-ஐ கிளிக் செய்யவும்.

Step 2: விவரங்களை உள்ளிடுதல்

Passport
  • இப்பக்கத்தில் பெயர், பிறந்த தேதி, Mail id, User id மற்றும் Password போன்ற அடிப்படை விவரங்களை முழுமையாக பிழையில்லாமல் உள்ளிடவும்.
  • அதன் பிறகு இறுதியாக Hint Question மற்றும் அதற்குரிய Hint Answer-ஐ உள்ளிட்டு Captcha-வை உள்ளிடவும், அதன் பிறகு Register என்பதை கிளிக் செய்யவும்.

Step 3: User id-ஐ Verification செய்தல்

Passport Apply
  • இப்போது Registration Confirmation என்று புதிய பக்கத்தில் தோன்றும், மற்றும் உங்களின் மெயில் ஐடிக்கு Link அனுப்பப்படும், அதனை கிளிக் செய்து User id-ஐ உள்ளிட்டு Verification செய்யவும்.

Step 4: Login செய்தல்

Tatkaal Passport
  • User id-ஐ Verification செய்தபிறகு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Existing User என்பதை கிளிக் செய்யவும். அதன்பிறகு User id, Password மற்றும் Captcha-வை உள்ளிட்டு Login என்பதை கிளிக் செய்து Passport Seva Login செய்யவும்.

Step 5: சேவையை கிளிக் செய்தல்

Apply Passport Online
  • இப்பக்கத்தில் Apply for Fresh Passport என்பதை கிளிக் செய்யவும்.

Step 6: நாடு மற்றும் மாவட்டத்தை உள்ளிடுதல்

Online Passport Apply
  • அதன் பிறகு அடுத்த பக்கத்தில் Alternative 1 என்பதற்கு கீழ் உள்ள Click Here to Fill the Application Form என்பதை கிளிக் செய்து, அதன் பிறகு State மற்றும் District-ஐ Select செய்யவும்.

Step 7: விவரங்களை Select செய்தல்

Types of Passport
  • அடுத்த பக்கத்தில் மேலே படத்தில் குறிப்பிட்டுள்ளபடி Select செய்யவும்.

Step 8: முழு விவரத்தையும் உள்ளிடுதல்

Passport Apply Fees
  • இப்பக்கத்தில் தங்களுடைய முழு விவரங்களையும் பிழையில்லாமல் உள்ளிடவும். உள்ளிட்ட பிறகு, Save my Details என்பதை கிளிக் செய்து Save செய்த பிறகு Next என்பதை கிளிக் செய்யவும்.

Step 9: Family Details உள்ளிட்டுதல்

Passport Online Apply
  • இப்பக்கத்தில் Family Details உள்ளிட்டு Next என்பதை கிளிக் செய்யவும்.

Step 10: முகவரி விவரங்களை உள்ளிட்டுதல்

Apply Passport Online
  • இப்பக்கத்தில் விண்ணப்பதாரரின் வீட்டு முகவரி விவரங்களை உள்ளிட்டு Next என்பதை கிளிக் செய்யவும்.

Step 11: Emergency Contact உள்ளிடுதல்

Passport Seva
  • அடுத்த பக்கத்தில் Emergency Contact உள்ளிட வேண்டும். இதில் விண்ணப்பதாரரின் பெற்றோரின் விவரங்களை உள்ளிடவும். அதன் பிறகு Next என்பதை கிளிக் செய்யவும்.

Step 12: விவரங்களை Select செய்தல்

Passport Apply Fees
  • அடுத்த பக்கத்தில், மேலே படத்தில் குறிப்பிட்டுள்ளபடி Select செய்து Next-ஐ கிளிக் செய்யவும்.

Step 13: தகவல்களை Select செய்தல்

Passport Apply Documents
  • இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்து Yes/ No-ஐ Select செய்து Next என்பதை கிளிக் செய்யவும்.

Step 14: Preview பக்கம்

Passport Apply Online Fees
  • இப்பக்கத்தில் Preview பார்த்துவிட்டு அனைத்து தகவலும் சரியாக இருந்தால் Next-ஐ கிளிக் செய்யவும்.

Step 15: Proof Select செய்தல்

Passport Seva Kendra
  • இப்போது அடுத்த பக்கத்தில் Date of Birth மற்றும் Address ஆகியவற்றிற்கு Proof-ஐ Select செய்து, Save my Details என்பதை கிளிக் செய்த பிறகு Submit Form என்பதை கிளிக் செய்யவும்.

Step 16: Payment பக்கம்

Passport Apply Fees
  • அடுத்த பக்கத்தில் Pay and Schedule Appointment என்பதை கிளிக் செய்து, அடுத்தப்பக்கத்தில் Online Payment என்பதை கிளிக் செய்யவும்.

Step 17: Location-ஐ Select செய்தல்

Passport Seva Online Portal
  • இப்பக்த்தில் Location-ஐ Select செய்து Next-ஐ கிளிக் செய்யவும். அடுத்த பக்கத்தில் உங்கள் Appointment-க்கான Date And Time கொடுக்கப்பட்டிருக்கும், அதனை நாம் Change செய்யலாம். அதன் பிறகு Pay and Book Appointment-ஐ கிளிக் செய்து Payment செய்யவும்.

Step 18: விண்ணப்பம் சமர்பிக்கப்பட்ட பக்கம்

Passport Apply Online Login
  • Payment செய்த பிறகு, மேலே கொடுக்கப்பட்டுள்ள பக்கம் வந்தவிட்டால் நீங்கள் பாஸ்போர்டிற்காக Passport Seva Appointment புக் செய்து விட்டீர்கள்.

Step 19: Home Page

Passport Seva Login
  • Payment செய்த பிறகு Home Page-க்கு வந்துவிட்டால், மீண்டும் Login செய்யவும் அடுத்த பக்கத்தில், Track payment Status-ஐ கிளிக் செய்து Passport Track செய்து Passport Status செக் செய்து கொள்ளலாம்.
  • Payment Status, Pending என வந்தால் Click here to Re-verify the Payment என்பதை கிளிக் செய்யவும்.

Step 20: Print Recipt பக்கம்

Passport Apply Charges
  • இப்பக்த்தில் Location-ஐ Select செய்து Next-ஐ கிளிக் செய்யவும். அடுத்தபக்கத்தில் உங்கள் Appointment-க்கான Date And Time கொடுக்கப்பட்டிருக்கும், அதனை நாம் Change செய்யலாம். அதன் பிறகு Book Appointment கிளிக் செய்யவும். அதன் பிறகு Successfully Submitted வரும். Print Recipt கிளிக் செய்யவும்.
Passport Login

Step 21: Application Print பக்கம்

Passport Tracking
  • இப்பக்கத்தில் Print Application recipt-ஐ கிளிக் செய்து Application Print செய்யலாம். இதனை PDF ஆகவும் Download செய்து கொள்ளலாம்.

பாஸ்போர்ட் விண்ணப்ப தேவையான ஆவணங்கள் (Documents required for passport application)

பாஸ்போர்ட் அப்ளை செய்ய முகவரி மற்றும் பிறந்ததேதிக்கு சான்றுகள் தேவைப்படும். எனவே Passport Apply Documents இனி பார்க்கலாம்.

முகவரி சான்றுகள் (Address proofs)

  1. ஏதேனும் பயன்பாட்டு பில்கள் (Any Utility Bills)
  2. வருமான வரி மதிப்பீட்டு உத்தரவு (Income Tax Assessment Order)
  3. வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card)
  4. ஆதார் அட்டை (Aadhaar Card)
  5. வாடகை ஒப்பந்தம் (Rental Agreement)
  6. மைனர் என்றால் பெற்றோரின் பாஸ்போர்ட் நகல்

பிறந்த தேதிக்கான சான்று (Proof of date of birth)

  1. பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate)
  2. ஆதார் அட்டை (Aadhaar Card)
  3. வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card)
  4. பான் கார்டு (Pan card)
இதையும் படியுங்கள்: ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் (Passport Application Fees)

இரண்டு வகையான பாஸ்போர்ட் விண்ணப்பிக்கப்படுகிறது. எனவே Passport Apply Fees எவ்வளவு என இனி பார்க்கலாம்.

சேவைகள்தட்கல் விண்ணப்பகட்டணம்விண்ணப்பகட்டணம்
36 பக்கங்கள் தீர்ந்துவிட்டதால் கூடுதல் பக்கங்களுடன் மீண்டும் வழங்குதல்.₹1,500₹ 2,000
60 பக்கங்கள் தீர்ந்துவிட்டதால், கூடுதல் பக்கங்களுடன் மீண்டும் வழங்குதல்.₹ 2,000₹ 2,000
18 வயதுக்குட்பட்வர்களுக்கு புதிய பாஸ்போர்ட் அல்லது மீண்டும் பாஸ்போர்ட் வழங்குதல் (36 பக்கங்கள்)₹ 1,000₹ 2,000
தொலைந்த மற்றும் சேதமடைந்த அல்லது திருடப்பட்டால் பதிலாக மாற்று பாஸ்போர்ட் (36 பக்கங்கள்) வழங்குதல்₹ 3,000₹ 2,000
தொலைந்த மற்றும் சேதமடைந்த அல்லது திருடப்பட்டால் பதிலாக மாற்று பாஸ்போர்ட் (60 பக்கங்கள்) வழங்குதல்₹ 3,500₹ 2,000
ECR-ஐ நீக்குவதற்கு மாற்று பாஸ்போர்ட் (36 பக்கங்கள்) வழங்குதல்/தனிப்பட்ட விவரங்களில் மாற்றம் செய்தல் ₹ 1,500₹ 2,000
ECR-ஐ நீக்கி பாஸ்போர்ட்டை (60 பக்கங்கள்) மாற்றுதல்/தனிப்பட்ட விவரங்களில் மாற்றம் செய்தல் ₹ 2,000₹ 2,000
ECR-ஐ நீக்கி பாஸ்போர்ட்டை 36 பக்கங்களாக மாற்றுதல்/ 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட விவரங்களில் மாற்றம் செய்தல்₹ 1,000₹ 2,000
காவல்துறை அனுமதிச் சான்றிதழ்₹ 500Nill

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் (Eligibility for passport application)

  • 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
  • இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும்.
  • 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 5 ஆண்டுகள் அல்லது 18 வயது வரை செல்லுபடியாகும் பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
  • 15 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் 10 வருட செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலஅளவு (Passport validity period)

  • சாதாரணமான 36 பக்கங்கள் மற்றும் 60 பக்கங்களை கொண்ட பாஸ்போர்ட்கள், வழங்கப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
  • 18 வயதுக்குட்பட்ட குடிமக்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட்டுகள் 5 ஆண்டுகள் செல்லுபடியாகும்.
  • 15-18 வயது வரை உடையவர்கள் 10 வருடம் வரை செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டைத் தேர்வு செய்து பெறலாம். இவை 10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
  • 15-18 வயது வரை உடையவர்கள், இவர்கள் 18 வயது வரை செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம், இவை 18 வயது வரை செல்லுபடியாகும்.

பாஸ்போர்ட் கிடைக்க ஆகும் காலஅளவு

  • ஜெனரல் பாஸ்போர்ட்கள் விண்ணப்பித்த நாளிலிருந்து 30 முதல் 45 நாட்கள் பதிவுசெய்யப்பட்ட முகவரியை வந்தடையும்.
  • தட்கல் முறையில் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு பாஸ்போர்ட் 7 முதல் 14 நாட்களில் வந்தடையும்.
FAQ – Passport Apply

1. பிறந்த தேதிக்கான சான்றுக்கு எந்தெந்ந ஆவணங்களை பயன்படுத்தலாம்?

பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு.

2. முகவரி சான்றுக்கு எந்தெந்ந ஆவணங்களை பயன்படுத்தலாம்?

ஏதேனும் பயன்பாட்டு பில்கள், வருமான வரி மதிப்பீட்டு உத்தரவு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாடகை ஒப்பந்தம், மைனர் என்றால் பெற்றோரின் பாஸ்போர்ட் நகல்.

3. ஜெனரல் பாஸ்போர்ட்கள் எத்தனை நாட்களில் கிடைக்கும்?

ஜெனரல் பாஸ்போர்ட்கள் 30 முதல் 45 நாட்களுக்குள் கிடைக்கும்.

4. தட்கல் பாஸ்போர்ட் எத்தனை நாட்களில் கிடைக்கும்

தட்கல் பாஸ்போர்ட் 7 முதல் 14 நாட்களில் கிடைக்கும்.

5. பாஸ்போர்ட் விண்ணப்பிக்க ஆன்லைனில் பணம் செலுத்தும் முறைகள் என்ன?

SBI Bank Challan, SBI வாலட், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, Internet Banking (SBI and other banks).

6. அப்பாயிண்ட் தேதி புக் செய்த பிறகு மாற்றி அமைக்கலாமா?

அப்பாயிண்ட் தேதியை ஒரு வருடத்திற்குள் 2 முறை மாற்றி அமைக்கலாம்.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular