இந்த நவீன காலத்தில் ஆன்லைன் பேமெண்ட்கள் மிகவும் பிரபலமாகிவிட்டது. இப்போது அனைவரும் இதுபோன்ற ஆன்லைன் முறைகளில் தான் பணபறிமாற்றம் அதிக அளவில் செய்கிறோம்.இந்நிலையில் நம்மில் பலரும் யுபிஐ (UPI Payment Method) மூலம் பண பரிமாற்றம் செய்யும் போது ஒரு முறையாவது தவறுதலாக அல்லது கவனகுறைவாக மாற்றி அனுப்பி இருக்கலாம். அப்போது என்ன செய்வது என்று அறியாமல் பலரும் இருந்து இருப்போம்.
இப்போது இந்த பதிவில் நாம் தவறுதலாக பணம் அனுப்பி விட்டால் (UPI Payment Mistake) என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். நாம் இதற்கு முன் நமக்கு தெரியாதவர்களுக்கு பணத்தை அனுப்பிவிட்டால் அந்த பணத்தை நாம் மீட்டெடுக்க மிக முக்கியமான படி என்னவென்றால் நாம் செய்த பரிமாற்றம் தவறானது என்று நிரூபிக்கப்பட்டவுடன் அதனை சரி செய்வது வங்கியின் பொறுப்பாகும். இதை நாம் அறிய வேண்டும்.
இது குறித்து ரிசர்வ் வங்கி கூறுகையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான தொடங்கப்பட்ட Ombudsman என்னும் திட்டத்தின் படி நம் குறைகளை நாம் வங்கி நிறுவாகத்திடம் தொரிவிக்கலாம். மேலும் சரியான நேரத்தில் புகார் அளித்தால் உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம்.
UPI Helpline Numbers
Phone Pe | 1800-419-0157 |
Google Pay | 080-68727374 |
Paytm | 0120-4456-456 |
BHIM | 18001201740 |
இந்த எண்களை தொடர்பு கொண்டு நாம் நம்முடைய புகார்களை தெரிவிக்கலாம். இதன் மூலம் நம் பணம் மீண்டும் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலம் நாம் செய்யும் தவறாக UPI Transaction மூலம் இழக்கும் பணத்தை நாம் மீண்டும் பெற்றகொள்ளலாம்.
இதையும் படியுங்கள்: UPI Full Form in Tamil: யுபிஐ பற்றிய தெளிவான மற்றும் சுவாரஸ்ய தகவல்கள்..! |