Homeசமையல் குறிப்புகள்அடிக்கிற வெயிலுக்கு சுவையான வெள்ளரிக்காய் ஜூஸ்..! 5 நிமிடத்தில் செய்வது எப்படி?

அடிக்கிற வெயிலுக்கு சுவையான வெள்ளரிக்காய் ஜூஸ்..! 5 நிமிடத்தில் செய்வது எப்படி?

இந்த வெயில் காலத்தில் நீர் காய்கள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதிலும் இந்த கோடையில் அதாவது இந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் அதிகம் எடுத்துக்கொண்டாலே போதுமானது. இந்த சீசனில் கிடைக்கும் பழங்களில் முக்கியமான ஒரு பழம் தான் இந்த வெள்ளரிக்காய் இதனை நம்மில் பலரும் சாப்பிட்டு இருப்போம்.

ஆனால் இந்த காலக்குழந்தைகள் இதுபோன்ற உணவுகளை அதிகம் விரும்பி உண்பது இல்லை. அதுபோல உள்ள குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் இந்த வெள்ளரிக்காயை வைத்து சுவையான ஜூஸ் 5 நிமிடத்தில் செய்வது எப்படி என்பது குறித்து (Cucumber Juice Recipes) இப்பதிவில் பார்க்கலாம்.

வெள்ளரிக்காய் ஜூஸ் செய்வது எப்படி (How To Make Cucumber Juice)

தேவையான பொருட்கள் (Cucumber Juice Ingredients)

  • வெள்ளரிக்காய் – 1
  • எலுமிச்சை – அரை பழம்
  • தேன்- 2 டீஸ்பூன்
  • சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – 1 கிளாஸ்
  • இஞ்சி- சிறிய துண்டு

செய்முறை (Vellarikai Juice Seivathu Eppadi)

  • முதலில் வெள்ளரிக்காயை தோலுரித்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • பின்னர் மிக்சியில் நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டுகள், இஞ்சி மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து அதனை வடிகட்டி கொள்ளவும்.
  • பிறகு அந்த சாறுடன் உப்பு, எலுமிச்சை சாறு, தேன் மற்றும் சீரகப் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தற்போது சுவையான வெள்ளரிக்காய் ஜூஸ் 5 நிமிடத்தில் தயார்.

நாம் இப்பதிவில் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெள்ளரிக்காய் ஜூஸ் செய்வது எப்படி (Vellarikai juice poduvathu eppadi) என்பது பற்றி பார்த்துள்ளோம்.

Cucumber Juice Benefits

Cucumber Juice Benefits

  • கோடை காலத்தில் உடல் வெப்பமடைவதில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
  • இந்த வெள்ளரிக்காய் ஜூஸ் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
  • இது உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.
  • உடலின் ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்க உதவுகிறத.
  • இது உங்கள் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
  • இது இந்த கோடையில் இருந்து உங்களது சருமத்தை பாதுகாக்க உதவுகிறது
அடிக்கிற வெயிலுக்கு சுவையான வெள்ளரிக்காய் ஜூஸ்..! 5 நிமிடத்தில் செய்வது எப்படி?

வெள்ளரிக்காயை வைத்து சுவையான ஜூஸ் 5 நிமிடத்தில் செய்வது எப்படி என்பது குறித்து (Cucumber Juice Recipes) இப்பதிவில் பார்க்கலாம்.

Type: Juice

Cuisine: Tamilnadu

Keywords: Cucumber Juice, Vellarikai Juice Seivathu Eppadi,

Recipe Yield: 1

Preparation Time: PT5M

Cooking Time: PT5M

Total Time: PT10M

Recipe Ingredients:

  • Cucumber – 1
  • Lemon – half a fruit
  • Honey- 2 tbsp
  • Cumin powder – 1/2 tsp
  • Salt – required quantity
  • Water – 1 glass
  • Ginger- small piece

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் உருக வைக்கும் குளுகுளு குல்பி..! வீட்டிலேயே செய்யலாம் வாங்க..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular