Homeசமையல் குறிப்புகள்அடுப்பே இல்லாமல்..! துளி கூட சர்க்கரை சேர்க்காமல் இந்த வெயிலுக்கு ஜில்லுனு ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க..!

அடுப்பே இல்லாமல்..! துளி கூட சர்க்கரை சேர்க்காமல் இந்த வெயிலுக்கு ஜில்லுனு ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பொருள் தான் ஐஸ்கிரீம். அதுவும் இந்த கோடை காலத்தில் செல்லவே தேவையில்லை அடிக்கடி கடைகளில் வாங்கி சாப்பிடுவது உண்டு. இப்போதெல்லாம் சிலர் தங்களின் வீடுகளிலேயே ஐஸ்கிரீம் தயார் செய்து சாப்பிடுகின்றனர். ஆனால் அது மிகவும் சுலபம் அல்ல நீண்ட நேரம் எடுத்து சமைத்து செய்ய வேண்டும. மேலும் இந்த ஐஸ்கிரீம்களில் அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்படுவதாலும் பலர் இதனை வீடுகளில் முயற்சி செய்யமலே இருந்து இருப்போம். எனவே நாம் இப்பதிவில் அடுப்பு மற்றும் சர்க்கரையை பயன்படுத்தாமல் சுவையான ஐஸ்கிரீம் செய்வது எப்படி (How To Make Ice Cream Without Gas in Tamil) என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

ஐஸ்கிரீம் செய்வது எப்படி (How To Make Ice Cream in Tamil)

தேவையான பொருட்கள்

  • வாழைப்பழம் – 7 முதல் 8 வரை
  • கொக்கோ பவுடர் – அரை கப்
  • பீனட் பட்டர் – 5 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் பால் – அரை கப்

ஐஸ்கிரீம் செய்முறை (Ice Cream Recipe Without Gas in Tamil)

  • இந்த ஐஸ்கிரீம் ரெசிபிக்கு வாழைப்பழம் தான் முக்கியமான பொருள் எனவே அதனை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
Ice Cream Recipe  in Tamil
  • இப்போது நாம் வெட்டி வைத்துள்ள வாழைப்பழத்தை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனோடு பீனட் பட்டர் சேர்த்து நன்கு பிளண்ட் செய்யவும்.
  • இவை நன்றாக பிளெண்ட் ஆன பிறகு அதோடு கொக்கோ பவுடர் சேர்த்து மீண்டும் நன்றாக பிளெண்ட் செய்ய வேண்டும்.
  • இப்போது இந்த கலவையைில் கெட்டியான தேங்காய் பால் ஊற்றி மீண்டும் பிளெண்ட் செய்த பிறகு அதனை ஒரு கண்டெய்னரில் ஊற்றவும்.
  • இப்போது அதனை நன்றாக மூடி, பிரிட்ஜில் வைத்து நன்றாக ப்ரீஸ் செய்யவும். இந்த கலவை நன்றாக ப்ரீஸ் அன பிறகு அதனை ஸ்கூப்பாக எடுத்து நாம் சாப்பிடலாம். இப்போது அடுப்பே இல்லாமல் சூப்பரான ஐஸ்கிரீம் தயார்.

நாம் இப்பதிவில் அடுப்பு மற்றும் சர்க்கரை இல்லாமல் சுவையான ஐஸ்கிரீம் செய்வது எப்படி (Ice Cream Seivathu Eppadi) என்பது குறித்து பார்த்துள்ளோம்.

RELATED ARTICLES

Most Popular