Homeசமையல் குறிப்புகள்வீட்ல மாவு இல்லையா? அப்போ 5 நிமிடத்தில் மாவே அரைக்காமல் Instant Dosa..! ஈஸியா செய்யலாம்...

வீட்ல மாவு இல்லையா? அப்போ 5 நிமிடத்தில் மாவே அரைக்காமல் Instant Dosa..! ஈஸியா செய்யலாம் வாங்க..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் காலை உணவு என்றால் அது தோசை தான். அது 1-ம் வகுப்பு படிக்கும் குழந்தை என்றாலும் சரி வயதான தாத்தா பாட்டிகள் என்றாலும் சரி அனைவரும் பிடித்த உணவு தான் இந்த தோசை. எத்தனை விதமான புதிய புதிய உணவுகள் வந்தாலும் இந்த தோசை மக்கள் மனதில் பிடித்துள்ள இடத்தை பறிக்கவே முடியாது என்னும் அளவுக்கு தான் உள்ளது.

இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தை பொருத்தவரையில் காலை உணவு என்றாலே தோசை தான். சில நாட்களில் வீட்டில் தோசை மாவு இல்லாத நேரத்தில் கூட மற்ற உணவுகளை உண்பதற்கு வீட்டில் இருப்பவர்கள் யோசிப்பர். சிலர் சண்டையிடுவதும் உண்டு. அது போன்ற நேரங்களில் தான் இந்த Instant Dosa Batter உங்களுக்கு உதவியாக இருக்கும்.

இந்த மாவு தயார் செய்ய அரிசி, உளுந்து ஆகியவற்றை நாம் மணிக்கணக்கில் ஊறவைத்து அவற்றை அரைத்து அதன் பிறகு இரவு முழுவதும் அந்த மாவை புளிக்க வைத்தல் என்று எதுவும் வேண்டாம். வெறும் 5 நிமிடங்களில் இந்த மாவை தயார் செய்து தோவை சுட்டு விடலாம். இப்போது இப்பதிவில் இந்த உடனடி தோசை மாவு செய்வது எப்படி (How to Make Instant Dosa Batter) என்பது குறித்துப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: உடலுக்கு வலுவான கம்பு லட்டு குழந்தைகளுக்கு பிடித்தது போல் செய்வது எப்படி..!

உடனடி தோசை செய்வது எப்படி (How to Make Instant Dosa)

தேவையான பொருட்கள்

  • ரவை- 2 கப்
  • அவல்- 1 கப்
  • உப்பு- தங்களின் சுவைக்கேற்ப
  • தயிர்- 5 ஸ்பூன்
  • பேக்கிங் சோடா- 1 ஸ்பூன்

செய்முறை (Instant Dosa Recipe In Tamil)

  • இந்த உடனடி தோசை மாவு செய்வதற்கு முதலில் 2 கப் ரவை மற்றும் 1 கப் அவல் இரண்டையும் தனித்தனியே 1 மணி நேரம் மட்டும் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பின்னர் இவற்றில் உள்ள தண்ணீரை வடித்து தண்ணியில்லாமல் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  • இப்போது இந்த அரைத்த கலவையில் தயிர், உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும். தற்போது மாவு பதத்திற்கு வருவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இப்போது இதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றினால் நமக்கு தேவையான உடனடி தோவை மாவு (Instant Dosa Batter) தயார்.
  • இறுதியாக தேசை தவாவை அடுப்பில் வைத்து தோசை போல் ஊற்றி எடுத்தால் சுவையான மொறுமொறு தோசை தயார்.
Instant Dosai Maavu Seivathu Eppadi

நாம் இப்பதிவில் மாவு இல்லாத நேரத்தில் நமக்கு உதவும் உடனடி தேசை மாவு செய்வது எப்படி (Instant Dosai Maavu Seivathu Eppadi) என்பது குறித்துப் பார்த்துள்ளோம்.

வீட்ல மாவு இல்லையா? அப்போ 5 நிமிடத்தில் மாவே அரைக்காமல் Instant Dosa..! ஈஸியா செய்யலாம் வாங்க..!

இப்பதிவில் மாவு இல்லாத நேரத்தில் உதவும் Instant Instant Dosa Batter செய்வது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.

Type: Appetizer

Cuisine: South India

Keywords: Instant Dosa Recipe, Instant Dosa Batter

Recipe Yield: 4

Preparation Time: PT1H15M

Cooking Time: PT5M

Total Time: PT1H20M

Recipe Ingredients:

  • Semolina- 2 cups
  • Aval- 1 cup
  • Salt- as per your taste
  • Yogurt- 5 tbsp
  • Baking soda- 1 tbsp

Recipe Instructions: இந்த உடனடி தோசை மாவு செய்வதற்கு முதலில் 2 கப் ரவை மற்றும் 1 கப் அவல் இரண்டையும் தனித்தனியே 1 மணி நேரம் மட்டும் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் இவற்றில் உள்ள தண்ணீரை வடித்து தண்ணியில்லாமல் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இப்போது இந்த அரைத்த கலவையில் தயிர், உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும். தற்போது மாவு பதத்திற்கு வருவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இப்போது இதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றினால் நமக்கு தேவையான உடனடி தோவை மாவு (Instant Dosa Batter) தயார். இறுதியாக தேசை தவாவை அடுப்பில் வைத்து தோசை போல் ஊற்றி எடுத்தால் சுவையான மொறுமொறு தோசை தயார்.

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: வெயிலுக்கு ஏற்ற குளு குளு கம்பங்கூழ்..! ஈஸியா செய்வது எப்படி?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular