கோடை காலம் தொடங்கிவிட்டது இதற்கு ஏற்றாற் போல நமது உணவு பழக்கவழக்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த கோடைக்கு மிகவும் சிறந்த உணவுகள் என்றால் அது நம் பாரம்பரிய உணவுகள் தான். இவற்றை நாம் உண்பதன் மூலம் நம் உடலை வெப்பதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். எனவே இனி வரும் காலங்களில் நாம் உடலை குளிர்ச்சியா வைத்துக் கொள்ளும் உணவுகளை தான் உண்ண வேண்டும். அது போன்ற உணுவுகளில் முக்கிய இடத்தை பிடிப்பது தான் இந்த கம்பங்கூழ். இது நம் உடலை குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே இப்பதிவில் இந்த கம்பங்கூழ் சுவையாக செய்வது எப்படி (How to make Kambu Kool) என்பது குறித்து பார்க்கலாம்.
கம்பங்கூழ் செய்முறை (How to Make Kambu Koozh Recipe in Tamil)
தேவையான பொருட்கள்
- கம்பு மாவு – 1 கப்
- அரிசி – 1 கை பிடி
- உப்பு – தேவையான அளவு
- தயிர் – 1 கப்
செய்முறை
- முதலில் கம்பை நன்றாக கழுவி அதனை அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- அதன் பிறகு தண்ணீரை நன்கு வடித்து நிழலில் காயவைக்கவும். நன்கு காய்ந்த பிறகு அதனை மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- தற்போது பொடித்த கம்பு மாவை தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்க வேண்டும். இந்த கலவையை ஒருநாள் முழுவதும் புளிக்க வைக்கவேண்டும்.
- இந்த கம்பங்கூழ் செய்வதற்கு அரிசியை நொய்யாக உடைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து முக்கால் பாகம் வெந்தத உடன், நாம் முதலில் கரைத்து புளிக்க வைத்த கம்பு மாவை இதில் சேர்த்து கட்டி இல்லாதவாறு கலந்து விட வேண்டும்.
- பின்னர் இவை இரண்டையும் நன்கு வேகவிட வேண்டும். அதன் பிறகு அதனை இறக்கி அப்படியே மூடி வைத்து விடவும்.
- மறுநாள் காலையில் இந்த கலவையில் உப்பு மற்றும் தயிர் சேர்க்க வேண்டும். நீங்கள் விருப்பப்பட்டால் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொள்ளலாம். இப்போது இந்த வெயிலுக்கு குளிர்ச்சி தரும் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கம்பங்கூழ் தயார்.
நாம் இப்பதிவில் இந்த வெயில் காலத்தில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் கம்பங்கூழ் எளிமையாக செய்வது எப்படி (Kambu Koozh Seivathu Eppadi) என்று பார்த்துள்ளோம்.
இதையும் படியுங்கள்: இந்த வெயிலுக்கு 5 நிமிடத்தில் சுவையான ராகி கூழ் செய்யலாம் வாங்க..! |