நம்மில் பலர் வீடுகளில் வாரம் தோறும் சமைக்கும் உணவுகள் என்றால் அவை சாம்பார், ரசம், புளிக்குளம்பு எனவே இவைகளை தான் நாம் மாற்றி மாற்றி சமைப்பதும் சாப்பிடுவதும் தான் வழக்கமாக உள்ளது. ஆனால் இந்த கோடைக்கு இது போன்ற காரமான குழம்புகளை வைத்து உண்பதை பலரும் விரும்புவது இல்லை. இதுப்போன்ற சமையங்களில் நாம் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளில் முக்கிய இடத்தை பிடிப்பது கீரை வகைகள் தான்.
இந்த கீரை வகைகளில் உள்ள சத்துக்கள் பற்றி நாம் அறியாதது இல்லை. அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் உள்ளன. எனினும் இதனை உட்கொள்ள பலரும் முன்வருவதில்லை. இதுபோல உள்ளவர்களுக்காக தான் தற்போது ஒரு சுவையான கீரை மோர் கூட்டு தயார் செய்ய உள்ளோம். இந்த ரெசிபி கீரை பிடிக்காதவர்களை கூட விரும்பி உண்ண தூண்டும் வகையில் இதன் சுவை இருக்கும். எனவே நாம் இப்பதிவில் சுவையான கீரை மோர் கூட்டு சுவையாக செய்வது எப்படி (How To Make Keerai Mor Kootu in Tamil) என்பது குறித்து விளக்கமாக பார்க்கலாம்.
கீரை மோர் கூட்டு செய்வது எப்படி (How To Make Keerai Mor Kootu)
கீரை மோர் கூட்டு செய்ய தேவையான பொருட்கள் (Keerai Mor Kootu Ingredients)
- சிறுகீரை – 1 கட்டு
- தண்ணீர் – 1/4 கப்
- தயிர் – 1 கப்
- தேங்காய் – 1/4 கப்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப (3 முதல் 4)
- அரிசி மாவு – 1/2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
- வரமிளகாய் – 2
- கடுகு – சிறிதளவு
- உளுத்தம் பருப்பு – சிறிதளவு
- பெருங்காயத் தூள் – சிறிதளவு
- பூண்டு – 10 பல்
- சிறிய வெங்காயம் – 2
இதையும் படியுங்கள்: Kuthiraivali Pongal Recipe: இத ஒரு டைம் செஞ்சு பாருங்க..! அப்புறம் இட்லி தோசை எல்லாம் மறந்துடுவீங்க..! |
கீரை மோர் கூட்டு செய்முறை (Keerai Mor Kootu Recipe in Tamil)
- முதலில் சிறு கீரையை எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் அதனை பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அலசிக் கொள்ள வேண்டும்.
- இப்போது எடுத்து வைத்துள்ள தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், தயிர், அரிசி மாவு, மஞ்சள் தூள் ஆகியவற்றை மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும், பின்னர் அந்த வாணலியில் கழுவி வைத்துள்ள கீரையை சேர்க்கவும். இப்போது கீரையுடன் சிறிது உப்பு மற்றும் கால் கப் தண்ணீர் நீரை ஊற்றி நன்கு வேக வைக்கவும்.
- இப்போது கீரை நன்கு வெந்த உடன் நாம் முன்னரே அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறவும்.
- இப்போது அந்த கலவை நன்கு கொதிக்க தொடங்கும். இந்நிலையில் இந்த கலவையில் கட்டிகளின்றி நன்கு அடித்து வைத்த தயிரை ஊற்றி கிளறி அடுப்பை அணைத்துவிட வேண்டும். தயிர் ஊற்றிய பிறகு அடுப்பில் வைத்து சமைக்க கூடாது.
- கிட்டத்தட்ட குழம்பிற்கான வேலை முடிந்தது. இப்போது இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு ஏற்ற அளவு எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்னர் எடுத்து வைத்துள்ள பூண்டு பற்களை தட்டி சேர்த்து அதன் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி அதனை கீரையுடன் சேர்த்து கிளறினால், சுவையான கீரை மோர் கூட்டு தயார்.
நாம் இப்பதிவில் இந்த வெயிலுக்கு குளிர்ச்சியான கீரை மோர் கூட்டு செய்வது எப்படி (Keerai Mor Kootu Seivathu Eppadi) என்பது குறித்து இப்பதிவில் பார்த்துள்ளோம்.
கீரை இருக்கா? அப்போ ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க..!பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..!
நாம் இப்பதிவில் கூவையான கீரை மோர் கூட்டு செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
Type: Appetizer
Cuisine: Tamil Nadu
Keywords: Keerai Mor Kootu, Keerai Mor Kootu Recipe in Tamil
Recipe Yield: 4
Preparation Time: PT10M
Cooking Time: PT30M
Total Time: PT40M
Recipe Ingredients:
- Spinach – 1 bunch
- Water – 1/4 cup
- Curd – 1 cup
- Coconut – 1/4 cup
- Cumin – 1 tbsp
- Green Chillies – As required (3 to 4)
- Rice flour – 1/2 table spoon
- Turmeric powder – 1/4 tsp
- Oil – 5 tbsp
- Red Chilli – 2
- Mustard – a little
- Ulutam dal – little
- Perungayam Powder - a little
- Garlic – 10 cloves
- Small onion – 2
4.5
இதையும் படியுங்கள்: Ulunthankali Recipe: ஊட்டம் தரும் உளுந்தங்களி… ஈசியாக செய்வது எப்படி? |