Homeசமையல் குறிப்புகள்உங்க குழந்தை சரியா சாப்பிடுவது இல்லையா? ஒரு முறை இந்த பன்னீர் தோசை செஞ்சு கொடுங்க..!...

உங்க குழந்தை சரியா சாப்பிடுவது இல்லையா? ஒரு முறை இந்த பன்னீர் தோசை செஞ்சு கொடுங்க..! அப்புறம் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு தான் தோசை. நாம் பல வகையான தோசைகள் செய்து இருப்போம். இவ்வாறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த தோசையை சுவையாகவும், அதே சமயத்தில் சத்தாகவும் நம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இப்போது நாம் இப்பதிவில் உடலுக்கு சத்தான பன்னீர் தோசை செய்வது எப்படி (How to make Paneer Masala Dosa in Tamil) என்பது குறித்து பார்க்கவுள்ளோம்.

பன்னீர் தோசை செய்வது எப்படி (How to make Paneer Dosa in Tamil)

தேவையான பொருட்கள் (Paneer Dosa Ingredients in Tamil)

  • தோசை மாவு – 1 கப்
  • பன்னீர் – 1/2 கப்
  • முட்டைக்கோஸ் – தேவைக்கு ஏற்ப (பொடியாக நறுக்கியது)
  • வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
  • குடைமிளகாய் – தேவைக்கு ஏற்ப (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி – 2
  • பூண்டு – 3 பற்கள்
  • கரம் மசாலா – அரை டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்
  • மல்லித்தூள் – கால் ஸ்பூன்
  • சோயா சாஸ் – அரை ஸ்பூன்
  • நெய் – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

பன்னீர் மசாலா தோசை செய்முறை (Paneer Masala Dosa Recipe in Tamil)

  • முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும்.
  • எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், முட்டைக்கோஸ் மூன்றையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும்.
  • இப்போது அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். இவை நன்கு வதங்கிய பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  • இப்போது டொமேட்டோ கெட்சப், நசுக்கிய பூண்டு, சோயா சாஸ், கரம் மசாலா தூள் மற்றும் மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பின்னர் அதில் சிறிதளவு நீர் தெளித்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கவும். இப்போது சுத்தம் செய்த பன்னீரை சேர்த்து இரண்டு இரண்டு நிமிடங்களுக்கு வேக வைக்கவும். இப்போது தோசைக்கு தேவையான மசாலா ரெடி.
  • இப்போது நாம் வழக்கமாக செய்வது போல தோசை கல்லில் சிறிதளவு மாவை விட்டு மெல்லிய தோசை ஒன்றை சுடவும். அந்த தோசையில் நாம் செய்து வைத்துள்ள இந்த பன்னீர் மசாலாவை சேர்த்து வேகவிட்டு எடுத்தால், சுவையான பன்னீர் தோசை தயார்.
Paneer Masala Dosai Seivathu Eppadi

நாம் இப்பதிவில் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான பன்னீர் தோசை செய்வது எப்படி (Paneer Masala Dosai Seivathu Eppadi) என்பது குறித்து இப்பதிவில் பார்த்துள்ளோம்.

உங்க குழந்தை சரியா சாப்பிடுவது இல்லையா? ஒரு முறை இந்த பன்னீர் தோசை செஞ்சு கொடுங்க..! அப்புறம் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..!

நாம் இப்பதிவில் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான பன்னீர் தோசை செய்வது எப்படி என்பது குறித்து இப்பதிவில் பார்க்கவுள்ளோம்.

Type: Appetizer

Cuisine: South India

Keywords: Paneer Dosa, Paneer Masala Dosa

Recipe Yield: 2

Preparation Time: PT10M

Cooking Time: PT30M

Total Time: PT40M

Recipe Ingredients:

  • Dosa Batter– 1 cup
  • Paneer – 1/2 cup
  • Cabbage – as required (finely chopped)
  • Onion – 1/4 cup (finely chopped)
  • Chillies – as required (finely chopped)
  • Tomato – 2
  • Garlic – 3 cloves
  • Garam masala – half teaspoon
  • Chilli powder – half spoon
  • Coriander powder – quarter spoon
  • Soya sauce – half a spoon
  • Ghee – required quantity
  • Oil – required amount
  • Salt – required quantity

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: வீட்ல மாவு இல்லையா? அப்போ 5 நிமிடத்தில் மாவே அரைக்காமல் Instant Dosa..! ஈஸியா செய்யலாம் வாங்க..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular