Homeசமையல் குறிப்புகள்பிளம் கேக் செய்வது எப்படி..? How to Make Plum Cake Recipe in Tamil..!

பிளம் கேக் செய்வது எப்படி..? How to Make Plum Cake Recipe in Tamil..!

How to Make Plum cake பற்றி இப்பதிவில் பார்க்க உள்ளோம், அதற்கு முன் கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றி பார்ப்போம். கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்தவர்களால் அதிக அளவில் கொண்டாடப்பட்டாலும், அனைத்து மதத்தினரும் கொண்டாடும் பண்டிகையாக உள்ளது. இப்பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து வீட்டை எல்லாம் அலங்கரித்து வெகு விமர்சையாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இவை எல்லாம் ஒருபக்கம் இருக்க, இனிப்புகள், நமக்கு பிடித்த உணவுகள் என பலரும் பலமுறைகளில் இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஆனால் அனைவரின் இல்லத்திலும் “கேக்” இல்லாமல் கிறிஸ்துமஸ் முழுமையடையாது. அதிலும் பிளம் கேக் தான் அனைவரின் நியாபகத்திலும் வரும். இதனை பலர் பழகேக் எனவும் அழைப்பார்கள். இப்பண்டிகையின் போது Christmas Plum Cake செய்வதை விடவும், இந்த கேக்கை கடைகளில் வாங்குவது அதிகம், ஏனெனில் வேலைப்பாடு அதிகம் என்ற எண்ணம் மற்றும் நாம் செய்தால் சுவை நன்றாக இருக்காது என்ற பயம். ஆனால் பிளம் கேக் செய்வது மிகவும் சுலபம் தான். இப்பதிவில் Plum Cake Seivathu eppadi என்பதை பற்றி பார்க்கலாம்.

பிளம் கேக் செய்முறை (How to Make Plum Cake Recipe)

தேவையான பொருட்கள்: Plum Cake Ingredients

பொருட்கள் அளவுகள்
மைதா 1 கப்
சர்க்கரை 1 கப்
வெண்ணெய் 1/2 கப்
முட்டைகள் 3
பேக்கிங் பவுடர் 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா 1/2 தேக்கரண்டி
உப்பு 1 பின்ச்
வெண்ணிலா எஸ்ஸன்ஸ் 1 டீஸ்பூன்
பொருட்கள் அளவுகள்
கருப்பு திராட்சை 1/2 கப்
செர்ரி 1/2 கப்
டுட்டி ஃப்ரூட்டி1/2 கப்
உலர் பழங்கள்1/2 கப்
திராட்சை சாறு / ரம் 1 கப்
பொருட்கள் அளவுகள்
இலவங்கப்பட்டை1
கிராம்பு2
ஏலக்காய்2
பொருட்கள் அளவுகள்
சர்க்கரை1/4 கப்
தண்ணீர்120 ml
கொதிக்கும் நீர்1/4 கப்

செய்முறை

Step 1: உலர் பழங்களை ஊறவைத்தல்

Plum Cake Recipe
  • முதலில் திராட்சை, செர்ரி, டுட்டி ஃப்ரூட்டி மற்றும் உங்கள் விருப்பமான நட்ஸ்களை ஆகியவற்றை திராட்சை ஜூஸில் ஊற வைக்க வேண்டும். பழங்கள் மற்றும் உலர் பழங்கள் அனைத்தும் முழுமையாக மூழ்கும் வரை திராட்சை சாறு சேர்க்கவும். இதற்கு 1 கப் திராட்சை சாறு / ரம் போதுமானதாக இருக்கும்.
  • இந்த கலவையை நன்றாக மூடி, குறைந்தபட்சம் 1 நாள் முழுவதும் ஊறவைக்கவும், இதனை அதிகபட்சமாக ஒரு மாதம் வரை ஊற விடலாம்.
  • முழுவதும் ஊறிய பிறகு திராட்சை சாறு உலர் பழங்களில் நன்றாக உறிஞ்சப்பட்டிருக்கும்.
  • ஆனால் நேரம் இல்லை என்றால், உடனடியாக கேக் வேண்டும் என்ற நிலையில் உலர்ந்த பழங்கள் அனைத்தையும் சாறுடன் சேர்த்து 5 நிமிடங்கள் வரை வேகவைக்கவும், அதன் பிறகு அவற்றை முழுமையாக ஆறவைக்க வேண்டும். தற்போது பழக்கலவை கேக் மாவில் சேர்க்க தயாராக உள்ளது.

Step 2: சர்க்கரையை மசாலா பொருட்களுடன் சேர்த்தல்

Plum Cake

மசாலா அறைக்க, 2 ஏலக்காய், 2 கிராம்பு , 2 ஜாதிக்காய், 1 பட்டை ஆகியவற்றினை சக்கரையுடன் சேர்த்து, நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

Step 3: கேரமல் செய்தல்

Blum Cake Recipe Step by Step

கால் கப் சர்கரையில் 120 ml தண்ணீர் சேர்த்து, கேரமல் தயார் செய்யவேண்டும். இப்போது நாம் சர்கரைக்கு பதிலாக நாட்டு சர்கரை கூட சேர்கலாம். கேரமல் தயார் ஆனதும், 1/ 4 கப் கொதிக்கும் சூடான நீரை சேர்க்கவும். இந்த கேரமல் நீர் நன்கு கொதித்தபிறகு அந்த நீரை ஆறவிடவும்.

Step 4: முட்டை மற்றும் சர்க்கரை கலவை செய்தல்

Easy Blum Cake Recipe

முதலில் ஒரு அகன்ற கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும், அதில் முதலாவதாக நாம் உருக்கி வைத்துள்ள வெண்ணையை சேர்க்கவும், அதனுடம் 3 முட்டைகள், பொடித்து வைத்துள்ள சர்கரை ஆகியவற்றை நன்றாக Visk வைத்து பீட் செய்ய வேண்டும்.

Step 5: கேக் பேட்டர் (Batter) செய்தல்

Blum Cake Making

அதன்பிறகு உலர்ந்த பொருட்களான, மைதா, பேக்கிங் புவுடர், பேக்கிங் சோடா போன்றவற்றை நாம் முன்பே பீட் செய்து வைத்துள்ள முட்டை, சக்கரை, வெண்ணெய் மற்றும் கேரமல் நீர் ஆகியவற்றினை இந்த கலவையுடன் சேர்த்து Cut & Fold Method-ல் மிக்ஸ் செய்யவும். அக்கலவையில் 1 பின்ச் அளவு உப்பு மற்றும் வெண்ணிலா எஸ்ஸன்ஸ் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

Step 6: ஊறிய பழங்களை சேர்த்தல்

Easy Plum Cake Recipe

நாம் முன்பு செய்த கலவையில் தற்போது ஊற வைத்த உலர்ந்த பழங்களை சேர்த்து மிக்ஸ் செய்யவும். தற்போது பிளம் கேக்கிற்கான பேட்டர் ரெடி.

Step 7: கேக்கை பேக் (Bake) செய்தல்

Rich Plum Cake Recipe

தற்போது இந்த கலவையை பட்டர் சீட் போடப்பட்ட ஒரு பேக்கிங் பாத்திரத்தில் சேர்க்கவும். இதனை 180 டகிரி செல்சியசிற்கு 10 நிமிடத்திற்கு Pre Heat செய்த Oven-ல் வைத்து 30 முதல் 35 நிமிடங்களுக்கு Bake செய்யவும், அதன் பிறகு டூத் பிக் அல்லது கத்தியை உள்ளே சொருகினால் ஒட்டாமல் வந்துவிட்டால், கேக் முழுமையாக தயாராகிவிட்டது என்று அர்த்தம்.

Step 8: Plum Cake

கேக் நன்றாக ஆறிய பின்னர், பேக்கிங் பாத்திரத்தில் இருந்து Demolde செய்யவும். இப்போது சுவையான Plum Cake ரெடி.

Rich Plum Cake

கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்

  • நாம் பயன்படுத்தும் Dry Fruits and Nuts எவ்வளவு நேரம் ஊற வைக்கப்படுகிறதே, பிளம் கேக்கின் சுவை அதிகமாக இருக்கும்.
  • உலர் பழங்களை ஊறவைக்க நேரம் இல்லை என்றால் அவற்றை பழசாறுடன் சேர்த்து 5 நிமிடங்கள் வரை வேகவைக்கவும், அவை முழுவதும் ஆறியபின் கேக் Batter-ல் சேர்க்கவும்.
  • பேரீச்சம்பழம் போன்ற உங்களுக்கு பிடித்த எந்த விதமான பழங்களையும் நீங்கள் சேர்க்கலாம், கருப்பு திராட்சைகள் இந்த கேக்கிற்கு அதிக சுவையை தருகிறது. எனவே மற்ற அனைத்து பொருட்களையும் விட கருப்பு திராட்சையை அதிக அளவில் சேர்க்கலாம். இந்த கேக்கில் Dry Fruits அதிக அளவில் சேர்க்கப்படுவதால், இந்த கேக்கினை Dry Fruit Cake எனவும் அழைப்பர்.
  • இந்த கேக்கில் Tutti Frutti அதிக அளவில் சேர்க்கப்படுவதால், இந்த கேக்கினை Tutti Frutti Cake எனவும் அழைப்பர்.
  • இந்த Plum cake செய்ய குறைந்த அளவிலான பொருட்களை கொண்டு மசாலாவை அரைக்கிறோம், அளவு குறைவு என்பதால் நன்கு அறையாது, எனவே சர்க்கரையை அதனுடன் சேர்த்து அரைக்கவும்.
  • கேரமல் செய்த பிறகு அந்த பாகில் குளிர்ந்த நீரை சேர்க்க கூடாது, குளிர்ந்த நீரை சேர்த்தால், சர்க்கரை படிகமாகும், எனவே சர்க்கரை படிகமாக்கலைத் தடுக்க சூடான நீரைப் சேர்க்க வேண்டும்.
  • இந்த பிளம் கேக்கை முட்டை இல்லாமலும் Eggless Plum Cake செய்யலாம், அதற்கு நாம் முட்டைக்கு பதிலாக தயிர் சேர்த்து செய்ய வேண்டும்.
  • Oven இல்லாமல் குக்கரில் பிளம் கேக் செய்யலாம், இப்போது plum cake recipe in cooker பற்றி பார்கலாம், இதற்கு குக்கரின் விசில் மற்றும் மூடியில் உள்ள ரப்பர் ஆகியவற்றை அகற்றி விட்டு 10 நிமிடத்திற்கு Free Heat செய்து கேக் பேட்டரை உள்ளே வைத்து, 40-45 நிமிடங்களுக்கு வேகவிடவும். அதன் பிறகு டூத் பிக் அல்லது கத்தியை உள்ளே சொருகினால் ஒட்டாமல் வந்துவிட்டால், கேக் முழுமையாக தயாராகிவிட்டது என்று அர்த்தம். முழுமையாக ஆறியதும் பரிமாறலாம்.
[rank_math_rich_snippet id=”s-0038d14b-9a58-44b8-8aad-825ea80afa1e”]
மேலும் படிக்க: முந்திரி பாதாம் கட்லி செய்வது எப்படி?

1. பிளம் கேக்கிற்கு நட்ஸ் சீக்கிரம் ஊற என்ன செய்ய வேண்டும்?

உலர் பழங்களை ஊறவைக்க நேரம் இல்லை சூழலில் அவற்றை பழசாறுடன் சேர்த்து 5 நிமிடங்கள் வரை வேகவைக்கவும், அவை முழுவதும் ஆறியபின் கேக் Batter-ல் சேர்க்கவும்.

2. பிளம் கேக்கிற்கு மசாலா எப்படி அறைக்க வேண்டும்?

மசாலா அறைக்க ஏலக்காய், கிராம்பு , ஜாதிக்காய், பட்டை ஆகியவற்றினை அறைக்கவேண்டும். இதனை சக்கரையுடன் சேர்த்து, அறைத்தால் நன்றாக அறைந்து பொடி ஆகும்.

3. பிளம் கேக்கிற்கு என்ன வகையான நட்ஸ் பயன்படுத்தலாம்?

அனைத்து வகையான Dry Fruits-களும் பயன்படுத்தலாம், அதில் சில முந்திரி, பாதாம், உலர் திராட்சை, பேரீச்சம்பழம் போன்ற உங்களுக்கு விருப்பமான Dry Fruits சேர்க்கலாம்.

5. முட்டை இல்லாமல் Plum Cake செய்வது எப்படி?

மேலே கூறியுள்ள அதே முறையில், முட்டைக்கு பதிலாக தயிர் சேர்த்து இந்த பிளம் கேக் செய்யலாம்.
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular