இந்த நவீன காலத்தில் பல புதிய புதிய பாணங்கள் வந்தாலும் பலரது விருப்பமான பாணமாக இருக்கும் பாணங்களில் ஒன்றுதான் இந்த ரோஸ் மில்க். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி பருகும் பாணங்களில் முக்கிய இடத்தை பிடிப்பது இந்த ரோஸ்மில்க் தான். அதும் இந்த வெயில் காலத்தில் செல்லவே தேவையில்லை அனைவரும் இப்போது கொளுத்தும் வெயிலுக்கு சில்லென ஏதாவது குடிக்க வேண்டும் என ரோஸ் மில்க் வாங்கி குடித்திருப்போம்.
ஆனால் கடைகளில் விற்கப்படும் ரோஸ் மில்க் எந்த அளவிற்கு சுகாதாரமாக செய்யப்படுகிறது என்பது நமக்கு தெரியாது. எனவே நாம் கடைகளில் சென்று பருகுவதை விட நாம் வீட்டிலேயே இதனை தயார் செய்து குடிக்கலாம். மிகவும் சுலபமாக ஐந்து நிமிடங்களில் செய்து விடலாம். இந்த பதிவில் தற்போது சுவையான ரோஸ் மில்க் செய்வது எப்படி (How To Make Rose Milk in Tamil) என்பது பற்றி பார்க்கலாம்.
ரோஸ் மில்க் செய்வது எப்படி (Rose Milk Recipe In Tamil)
தேவையான பொருட்கள்
- பால் – 1 லிட்டர்
- ரோஸ் மில்க் எசன்ஸ் – 1/4 கப்
- சர்க்கரை – சுவைக்கேற்ப
- பால் பவுடர் – 1 ஸ்பூன்
- முதலில் 1 லிட்டர் பாலை நன்றாக காய்ச்சி அதை முழுமையாக குளிர்விக்க வேண்டும்.
- பின்னர் இந்த பாலை மிக்ஸர் ஜரில் அதனுடன் 1 ஸ்பூன் பால் பவுடர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது இந்த கரைசலில் சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்க்கவும்.
- பின்னர் கால் கப் ரோஸ் மில்க் எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின்னர் ஐஸ்கட்டிகளை சேரத்து பரிமாறவும்.
- இந்த ரோஸ் மில்கில் பாதாம் பிசின் மற்றும் சியா சீட்ஸ் ஆகியவற்றையும் ஊறவைத்து சேர்த்துக்கொள்ளலாம்.
- இப்போது சுவையான ரோஸ் மில்க் தயார்.
நாம் இப்பதிவில் பலருக்கும் பிடித்த ரோஸ் மில்க் செய்வது எப்படி (Rose Milk Seivathu Eppadi) என்பது பற்றி பார்த்துள்ளோம். இந்த ரோஸ் மில்க் கோடைகாலத்தில் பருகுவதற்கு மிகவும் சுவையாகவும் இந்த வெயிலுக்கு இதமாகவும் இருக்கும். எனவே அனைவரும் இதனை தங்கள் வீடுகளில செய்து பருகலாம்.
இதையும் படியுங்கள்: உடல் சூட்டை தணிக்கும் சுவையான நுங்கு இளநீர் சர்பத் செய்வது எப்படி? |