மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக அதிமுகவினர் சார்பில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் பெரிய அளவிலான கொண்டாட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போல தான் அம்மாவின் பிறந்த நாளுக்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆதிமுக வினர் ஒரு பிரம்மாண்ட கேக்கை (Jayalalithaa Statue Cake) தயாரித்துள்ளனர்.
மக்களால் அன்போடு அம்மா என்று அழைக்கப்படும் செல்வி. ஜெ. ஜெயலலிதா 1965-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெண்ணிற ஆடை என்னும் படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பிறகு தொடர்ந்து பல வருடங்களுக்கு பல படங்களில் நடித்தார். மேலும் இவர் அதிமுக கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ராமச்சந்திரனுடன் 28 படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் முன்னணி நடிகையாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஆவார். அதன் பிறகு கடந்த 1980-ம் ஆண்டில் அரசியலில் நுழைந்தார். இவர் எம்.ஜி.ஆர் முன்னிலையில் அதிமுக கட்சியில் இணைந்தார். ஆரம்பத்தில் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்தார். அதன் பிறகு சத்துணவுத் திட்டத்தின் உயர்மட்ட குழு உறுப்பினராகவும், ராஜ்ய சபை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.
1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி எம்.ஜி.ஆரின் மறைந்தார். அதன் பிறகு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த அவர், ஒரு தனி பெண்ணாக கட்சியை வலிமைப்படுத்தினார், மேலும் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். அதன் பிறகு 1991,2001,2011 மற்றும் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று அவரது பிறந்தநாள் (Jayalalitha Birthday Cake) கொண்டாடப்படுகிறது. இந்த விழாவினை சிறப்பிக்க மதுரை மாவட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள் 300 கிலோ எடை மற்றும் 6 அடி உயரம் கொண்ட அம்மாவின் உருவம் போன்ற ஒரு கேக்கை (300 Kg 6 Feet Jayalalithaa Cake) தயார் செய்துள்ளனர். இந்த கேக் இன்று மதுரை மாவட்ட ஆதிமுக தலைமையகத்தில் வெட்டப்படவுள்ளது.
மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் 300 கிலோ எடை , 6 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட கேக்..#Madurai | #Jayalalithaa | #Cake | #Birthday | #PolimerNews pic.twitter.com/rnnkBil1IX
— Polimer News (@polimernews) February 23, 2024
இதையும் படியுங்கள்: பள்ளி மாணவர்களுக்காக புதிய இணையதளம்..! ஆன்லைனிலேயே படிக்கலாம்..! |