HomeAutomobilesHusqvarna Svartpilen 250: அறிமுகமாகிறது பிரீமியம் ரேசர் பைக்..!

Husqvarna Svartpilen 250: அறிமுகமாகிறது பிரீமியம் ரேசர் பைக்..!

இந்தியாவில் பல மாடல் பைக்குகள் இருந்தாலும் ரேஸ் பைக்குகள் மீது உள்ள பிரியம் எப்போதும் குறைவதே இல்லை. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக ரேஸ் பைக்குகளை அதிக அளவில் புதிய மாடல்களில் தொடர்ந்து அறிமுகமாகிவருகிறது. இந்த வரிசையில் இப்போது ஹஸ்க்வர்னா (Husqvarna) என்னும் மோட்டார் சைக்கிள் நிறுவனம் தற்போது தனது புதிய மாடல் பைக்கான Svartpilen 250 பைக்கை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த நிறுவனமானது சில மாதங்களுக்கு முன்பு தான் ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 401 (Husqvarna Svartpilen 401) என்ற புதிய மாடல் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பைக் ஒரு Scrambler மற்றும் ஆப் ரோடு கலந்த வகையில் இமாலயன் பைக் போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமின்றி, இந்த Husqvarna பைக்குகள் KTM நிறுவனத்தின் டியூக்-ன் அம்சங்களை சார்ந்து வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தான் தற்போது இந்த ஹஸ்க்வர்னா நிறுவனம் தனது புதிய மாடலான Svartpilen 250 பைக்கை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த 2024-ம் ஆண்டு ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 250 மாடலானது இதற்கு முன்னர் இந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட Vitpilen 250 மாடல் பைக்கில் உள்ள அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளாதவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பைக்கின் வடிவமைப்பில் Svartpilen 401 மாடலை போல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய Svartpilen 250 பைக்கின் என்ஜின் 249cc மற்றும் லிக்விட்-கூல்டு என்ஜின் ஆகும். மேலும் இது 9,000இல் 31bhp மற்றும் 7,250rpm இல் 25Nm உச்சகட்ட பவரை வெளிப்படுத்தும். அதேபோல இந்த Husqvarna Svartpilen 250 பைக்கானது 5 இன்ச் எல்சிடி திரையுடன் ப்ளூடூத் இணைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Husqvarna Svartpilen 250

இது போன்ற பல அம்சங்களைக் கொண்ட இந்த பைக்கின் விலை ரூ.1.80 லட்சத்தில் இருந்து தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தும் பைக்குகளை நாம் கேடிஎம் ஷோரூம்களில் வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Svartpilen 250 என்ஜின்249cc
Svartpilen 250 BHP9,000 இல் 31bhp
Svartpilen 250 PriceRs. 1.80 Lakhs
இதையும் படியுங்கள்: Kawasaki Z900 Features In Tamil: முக்கிய தகவல்கள் மற்றும் சிறப்பம்சங்கள்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular