இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அதிக அளவிலான இளம் வீரர்களை வைத்துள்ளது. இவர்களில் மிகவும் பிரபலமானவர் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal). இவர் பல போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாகவும், காரணமாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரின் 2-வது மற்றும் 3-வது போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிக சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தார். அவரது இந்த சிறப்பான விளையாட்டால் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்ததோடு மட்டுமின்றி ஐசிசி தரவரிசையிலும் (ICC Ranking List) அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதம் அடித்தார். இதன் காரணமாக தான் தரவரிசையில் இந்த மாற்றங்கள் நிகழ்துள்ளது. இப்போது விளையாடுவது போலவே இவர் தொடர்ந்து விளையாடினால் விரைவில் முதலிடத்திற்கு முன்னேறினார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் இளம் வீரரான ஜெய்ஸ்வால் முதன் முதலில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானபோது டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 69-வது இடத்தில் இருந்தார். இவருடைய சிறப்பான விளையாட்டு மூலம் 69-வது இடத்திலிருந்து படிப்படியாக முன்னேறி இப்போது 12-வது இடத்தில் உள்ளார். இப்போது தரவரிசையில் நிகழ்ந்துள்ள இந்த மாற்றம மிகப்பெரிய மாற்றமாகும்.
இந்த மாற்றத்தின் காரணமாக இங்கிலாந்து அணியின் முக்கிய வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் (Test Cricket Ranking List) முதலிடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு பின்தங்கி உள்ளார்.
தற்போது இந்த டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் (Test Cricket Batting Rankings List) நியூஸிலாந்து அணியின் வீரரான கேன் வில்லியம்சன் இப்போது முதலிடத்தில் உள்ளார். மேலும் இளம் வீரரான இவரின் முன்னேற்றம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: World Test Cricket: வெளியானது புள்ளிப்பட்டியல்..! இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா? |