சமீப காலமாக அதிக அளவிலான பிரபலங்கள் திடீரென்று மரணம் அடைகின்றனர். அதிலும் மாரடைப்பு காரணமாக உயிரிழக்கும் பிரபலங்கள் அதிக அளவில் உள்ளனர். அதிலும் சிறு வயதிலேயே பலர் இறக்கின்றனர். இது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. இந்நிலையில் தான் தற்போது பிரபலம் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த தகவல் குறித்த விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
பினாகா கீத் மாலா என்பது பிரபலமான நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் தொகுப்பாளர் அமீன் சயானி. இவர் மிகவும் புகழ்பெற்ற பிரபல வானொலி தொகுப்பாளர் ஆவார். இந்நிலையில் தான் இவர் தன்னுடைய 91 வயதில் காலமாகியுள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இந்த தகவலை (Ameen Sayani Death News) அவரது மகன் ராஜில் சயானி உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (21.02.2024) இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவரை மருத்துவமனைக்கு அளைத்து சென்றுள்ளனர். இவரை எச் என் ரிலையன்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இரவு 7 மணியளவில் (Ameen Sayani Passed Away) உயிரிழந்தார். இந்த தகவலை அவரது மகன் ராஜில் சயானி பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிடம் கூறிள்ளார்.
இவர் ரேடியோ சிலோனில் சில நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதன் மூலம் புகழ்பெற்ற அவரது குரல் இன்னும் பல நெஞ்சங்களில் நீங்காத ஒலித்துக்கெண்டு தான் உள்ளது. இவரது குரலுக்கு இன்றளவும் அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர் 1932-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி மும்பையில் பிறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: விவசாயிகள் மீது மீண்டும் தாக்குதல்..! நடந்தது என்ன? |