ரசிகர்களால் அன்போடு இசைஞானி என்று அழைக்கப்படுபவர் தான் இளையராஜா. இவருடைய வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் தான் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவல்கள் சில நாட்களாகவே பரவி வந்த நிலையில் இன்று இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இந்த படத்தின் போஸ்டரும் (Ilaiyaraaja Biopic First Look Poster) வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் தனுஷ் தான் வெளியிட்டுள்ளார்.
இந்த இளையராஜா பயோபிக் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் (Ilaiyaraaja Biopic Director) இயக்கவுள்ளார். இந்த படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் தான் நடிக்கவுள்ளார். தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கூட அருண் மாதேஸ்வரன் இயக்கிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மாபெரும் வெற்றிக்கு பிறகு அவர் இப்போது இவர் ராயன் என்னும் படத்ததையும் இயக்கி முடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இவர் NEEK என்னும் படத்திலும் இயக்கி வருகிறார். மேலும் தற்போது தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்னும் படத்திலும் அவர் நடித்து வருகிறார். இவ்வாறு தொடர்ந்து பிஸியாக உள்ள இவர் தற்போது இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த போஸ்டரில் இசைஞானி முதலில் சென்னைக்கு வாய்ப்பு தேடி ஒரு ஹார்மோனியப் பெட்டியின் வந்ததை நினைவுபடுத்தும் விதமாக இந்த போஸ்டர் உருவாகியுள்ளது.
இப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் (Ilaiyaraaja Biopic Hero) தனுஷ் நடிக்கிறார் என்ற தகவல் மட்டும் தான் வெளியாகியுள்ளது. மற்ற கதாபாத்திரங்களில் யாரெல்லாம் நடிக்கவுள்ளனர் என்பது பற்றிய எந்த தகவலும் தற்போது வரை வெளியாகிவில்லை. மேலும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: CWC 5: இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா? |