Homeசினிமாபுதுப்பேட்டை 2: படப்பிடிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது..!

புதுப்பேட்டை 2: படப்பிடிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது..!

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகளத்துடன் உள்ள படங்களை கொடுத்து மக்கள் மனதில் நிங்கா இடம் பிடித்தவர் தான் இயக்குனர் செல்வராகவன். இவர் பல வெற்றி படங்களை தமிழ் திரையுலகிற்கு வழங்கியுள்ளார். அந்த வரிசையில் முக்கிய இடத்தை பிடித்துள்ள படம் தான் புதுப்பேட்டை.

இயக்குனர் செல்வராகவன் தமிழ் திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். இதன் மூலம் இவர் பிரபலமானவர் இயக்குனராகவும் மாறினார். இவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், 7G ரெயின்போ காலனி, காதல் கொண்டேன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறியது. பிரபல இயக்குனராக வலம் வந்த இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தான் கடந்த 2006-ம் ஆண்டும் இவர் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் புதுப்பேட்டை. இந்த திரைப்படம் கதை ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடித்து இருப்பார். கதாநாயகியாக சினேகா நடித்து இருப்பார். மேலும் இப்படத்தில் நடிகை சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் (Pudhupettai 2 Update) குறித்த முக்கிய தகவர் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் படி புதுப்பேட்டை படத்தின் 2-ம் (Pudhupettai 2 New Update)பாகத்திற்கான கதை தயாராக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Pudhupettai 2 New Update

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு (Pudhupettai 2 Shooting) அடுத்த சில மாதங்களில் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் இந்த தகவல் தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: இலவச சமையல் சிலிண்டர் குறித்த அறிவிப்பு வெளியானது..! இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular