Homeசினிமாவிரைவில் வரவிருக்கும் விஷ்ணு விஷாலின் முண்டாசுப்பட்டி 2..!

விரைவில் வரவிருக்கும் விஷ்ணு விஷாலின் முண்டாசுப்பட்டி 2..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தனது சிறப்பான படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். மேலும் இவர் நடிக்கும் படங்களும் வித்தியாசமான கதைக்களத்துடன் இருப்பதால் மக்களுக்கும் பிடிக்கின்றது. இந்த வரிசையில் தான் கடந்த 2014-ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற திரைப்படம் தான் முண்டாசுபட்டி இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த படமானது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கு வெற்றிப்படமாகவே அமைந்தது. இந்த படத்தில் கதாநாயகனாக (Mundasupatti 2 Movie Hero) விஷ்னுவிஷால் நடித்து இருந்தார். மேலும் கதாநாயகியாக நடிகை நந்திதா நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

இந்த படத்தினை இயக்குனர் ராம்குமார் இயக்கி (Mundasupatti 2 Movie Director) இருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் இவர்களது கூட்டணியில் உருவான இரண்டாவது படம் தான் இராட்சசன். இந்த திரைப்படமும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரின் கூட்டணியில் அடுத்தப்படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் படி இவர்கள் கூட்டணியில் 2014-ம் ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்ற முண்டாசுபட்டி படத்தின் இரண்டாம் பாகம் தான் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஷ்ணு விஷாலின் 21-வது படமாக இப்படம் உருவாகி வருகிறது.

Mundasupatti 2 Movie Hero

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது கொடைக்கானல் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி மீண்டும் நான்காவது முறையாகவும் விஷ்ணு விஷால், ராம்குமார் காம்போ இணைய இருப்பதாக ஏற்கனவே சமூக வளைதளங்களில் தகவல் கசிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு காத்திருக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்: சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்..! மனம் திறந்த நடிகை ஸ்ரீதேவி..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular