போக்குவரத்து விதிகள் (Traffic Rules) என்பது அனைவரும் பாதுகாப்பாக பயணம் செய்வதற்காக வகுக்கப்பட்டு இருக்கும் விதிகள் ஆகும். இதனை பின்பற்றி அனைவரும் பயனம் செய்தால் எந்தவித சாலை விபத்துக்கள் ஏற்படாமல் அனைவரும் பத்திரமாக பயணம் செய்யலாம்.
அரசு வகுத்துள்ள சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை ஓட்டுவதால் தான் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன. இருசக்கர வாகனத்தை ஓட்டும் போது ஸ்டைல் காட்டுவதாக கூறி பல இளைஞர்கள் சாலை விபத்தில் சிக்கி கொள்வது மட்டும் அல்லாமல் சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இது போன்ற விபத்துகளை தவிர்ப்பதற்காக வாகன ஓட்டுனர்கள் சாலை விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் அரசு பல சாலை விதிகளை விதித்துள்ளது. அதனை நாம் ஒரு சிறு பொருட்டாக கூட மதிப்பதில். இதன் காரணங்களால் பல விபத்துக்கள் நிகழ்கின்றன. அவற்றை தவிர்ப்பதற்கான வாகன ஓட்டிகளுக்கான சில சாலை பாதுகாப்பு விதிகளை (Traffic Safety Rules) இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம். இவற்றை படித்து சாலை விதிகளை கடைபிடிப்போம்..! நம் உயிரை மதிப்போம்..!
Table of Contents
போக்குவரத்து விதிகள் (Traffic Rules in Tamil)
சாலை விதிகளை பற்றியும், விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்காகவும் அரசு பல போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் (Traffic Rules Poster), நாட்டிஸ்கள் மற்றும் விளம்பரங்களை செய்துள்ளது.
- இரு சக்கர வாகனம் ஓட்டும் போது ஓட்டுநர் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் பயணிக்க கூடாது.
- மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்ட கூடாது.
- பொது இடங்களில் புகை பிடிப்பது குற்றமாகும். அதேபோல் வாகனம் ஓட்டும் போது புகை பிடிக்க கூடாது.
- சாலை நடுவில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு கோடுகள் போட்டு இருந்தால், இந்த இடத்தில் ஒரு வாகனத்தை நாம் முந்திச் செல்லலாம் என்று அர்த்தம்.
- சாலையின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை தடுப்புச் சுவராக எண்ண வேண்டும். அதனை தாண்டி வாகனத்தை ஓட்ட கூடாது.
- அதே போல் தொடர்ச்சியான சாலை நடுவில் கோடு போடப்பட்டு இருந்தால் ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை இந்த இடத்தில் முந்தி செல்லக்கூடாது என்று அர்த்தம்.
- சாலை வளைவு பகுதிகளில் வாகனங்களை முந்தி செல்ல கூடாது.
- இந்தியாவில் உள்ள மோட்டார் வாகன சட்டத்தின் படி, வாகனத்தின் பின்பக்கம் இருக்கக்கூடிய சிவப்பு நிற சின்னம் ஆனது எச்சரிக்கை சின்னமாக கருதப்படுகிறது.
- இந்த சிவப்பு நிற சின்னத்தை சாலையில் வாகனம் பழுதாகி நின்றாலோ அல்லது அவசர நிலையில் இருந்தால் மட்டுமே அதை வாகனத்தின் பின்பக்கம் வைக்க வேண்டும். அதுவும் வாகனத்தில் இருந்து 15 அடி தள்ளி வைக்க வேண்டும்.
- நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும்.
- நெடுஞ்சாலைகளில் வேக கட்டுப்பாடு குறித்த குறியீடுகள் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும்.
- சாலையில் செல்லும் போது வாகனங்களை அதிவேகத்தில் ஓட்ட கூடாது.
- வாகனம் ஆர்டிஓவில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
Traffic Light Rules
சாலையில் வாகனங்கள் ஓட்டும் போது போக்குவரத்து விளக்கு விதிகளை (Traffic Light Rules) பின்பற்ற வேண்டும். அவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறினால் வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
- சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தால் வாகனங்கள் நிற்க வேண்டும், மஞ்சள் விளக்கு எரிந்தால் வாகனங்களை தயாராக வைத்திருக்க வேண்டும், அதேபோல் சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தால் வாகனங்கள் செல்ல வேண்டும்.
- சாதாரண நேரத்தில் வாகனத்தின் நான்கு திசையிலும் இருக்கும் எச்சரிக்கை விளக்கை எரிய விடக்கூடாது. ஆபத்து நேரத்திலோ அல்லது பழுதடைந்த வாகனத்தை மற்றொரு வாகனங்கள் இழுத்துச் செல்லும் போதோ அல்லது வாகனம் பழுதாகி நிற்கும் போதோ தான் வாகனத்தின் எச்சரிக்கை விளக்கை எரியவிட வேண்டும்.
- சிக்னலில் நிற்கும் போதோ அல்லது சாலைகளில் நிறுத்தி இருக்கும்போதோ வாகனத்தின் எச்சரிக்கை விளக்கை எரியவிட கூடாது, அனைத்து தான் வைக்க வேண்டும்.
- நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது எதிராக வரும் வாகன ஓட்டுணருக்கு வசதியாக இருக்கும் வகையில் உங்கள் வாகனத்தின் முகப்பு விளக்கை 250 மீ -க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும் என்பது சாலை விதிகளுல் ஒன்று.
- மதிய வேளைகளில் வாகனத்தின் முகப்பு விளக்கை எரியவிட்டு எதிரில் வரும் வாகனத்தை எச்சரித்தபடி செல்வது தவறு ஆகும்.
மேலும் தெரிந்து கொள்ளவேண்டியவை
சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காக அரசு பல போக்குவரத்து (Traffic Rules in Tamil Nadu) விதிகளை விதித்துள்ளது. இவை அனைத்தும் உயிர் சேதங்களை தவிர்பதற்காக தான். சாலை விதிகள் மட்டுமின்றி மேலும் சில தகவல்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது. அவற்றை பற்றி தற்போது பார்க்கலாம்.
- வாகனம் ஓட்டும் நபருக்கு கண் பார்வை என்பது மிகவும் முக்கியம். ஓட்டுநரின் பார்வை திறனை எதிரில் வரும் வாகனத்தின் பதிவு எண்ணை 67 அடி தொலைவில் இருந்தே படிக்கும் அளவிற்கு இருக்க வேண்டும் என்பது சட்டமாகும்.
- எனவே வாகன ஓட்டுநர்கள் வருடத்திற்கு ஒரு முறை கண் பரிசோதனை, இரத்த அழுத்த மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை போன்றவற்றை செய்ய வேண்டும்.
- காரில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிவது அவசியம். அதே வேலையில் சீட் பெல்ட் போட்டவர்கள் சட்டை பையில் பென், மொபைல் மற்றும் காசு போன்றவற்றை வைக்க ஊடாது. குறிப்பாக பெண்கள் விலையுயர்ந்த ஆபரணங்களை அணியக்கூடாது. ஏனென்றால் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது இவை உங்கள் உயிருக்கு ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது.
- நான்கு வழிச் சாலைகளில் செல்லும் போது இரண்டு சாலைகளுக்கும் நடுவில் செடிகள் வளர்க்கப்பட்டு இருக்கும் இதனை அனைவரும் பார்த்திருப்பீர்கள். இதற்கான காரணம் என்னவென்றால் எதிர்வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளின் ஒளியை தடுப்பதற்காகத்தான். இந்த அரளி செடிகள் கோடை காலத்திலும் வளரும் என்பதால் இந்த செடிகள் நான்கு வழி சாலையில் வளர்க்கப்படுகின்றன.
- அவசர காலங்களில் அழைப்பதற்கான அரசு வெளியிட்டுள்ள எண் தான் 108. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 108 மட்டுமின்றி 112 என்ற எண்ணையும் அரசு அவசர கால எண்ணாக அறிவித்துள்ளது.
- மொபைலில் சிக்னர் இல்லாத நேரத்திலும், போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும். மேலும் சிம் கார்டு இல்லாத நேரத்திலும் கூட இந்த 112 எண்ணை தொடர்பு கொள்ள முடியும்.
இது போன்ற விதிகளை நாம் முறையாக பின்பற்றி எந்த ஒரு விபத்தும் ஏற்படாத வண்ணம் வாகனங்களை ஓட்ட வேண்டும்.